பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 219

திரு. தொண்டமான் அவர்கள் இருபத்தைந்து பட்டிமண்டபங்களுக்குத் தலைமை தாங்கி வெள்ளிவிழாக் கொண்டாடியவர். விவாதத்துக்குரிய நல்ல பல விஷயங்களை மோதவிட்டு அதன் மூலம் இலக்கியத்தின் நயங்களை எல்லாம் வெளிப்படுத்தி கூடியிருப்பவர்களை அனுபவிக்கச் செய்வதில் அவர்களுக்கு ஒரு தனி ஆர்வம். தாம் பங்கு கொண்ட பட்டிமண்டபங்களுக்கெல்லாம் தலைமை தாங்கி, வாதப் பிரதிவாதங்களையெல்லாம் பொறுமையுடன் கேட்டுத் தீர்ப்பு வழங்குவதில் வல்லவர். தீர்ப்புகளை நகைச்சுவையோடு சமத்காரமாகவும் வழங்குவதிலே தேர்ந்தவர். பாஸ்கரன் தீர்ப்பு வழங்குகிறார் என்றால் சபையோர் கலகலப்புக்கும் பரபரப்புக்கும் கேட்கவே வேண்டாம். தொண்டமான் அவர்கள் தலைமை தாங்கிய பட்டிமண்டபங்களில் குறைந்தபட்சம் 20 பட்டிமண்டபங்களில் கலந்து கொண்ட பெருமை எனக்குண்டு. வென்றுமிருக்கிறேன், தோற்றுமிருக்கிறேன். வெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாவிக்கும் மனப்பாங்கை எனக்கு உணர்த்தியவர் என் தந்தையார் தான். பட்டி மண்டபத்திலே வெற்றி தோல்வி முக்கியமல்ல. வாதிடும் திறமைதான் முக்கியம். ஒரு கலக்கு கலக்கி, பின் தெளிய விட வேண்டும். அதுதான் ரஸம், அதுதான் சுவை என்பார்கள்.

பட்டிமண்டபத்துக்கு ஏற்ற இலக்கிய நூல் கம்பராமாயணம், என்பது அவர்களது எண்ணம். கம்பராமாயணத்திலேதான் விவாதத்திற்குரிய விஷயங்களும், பாத்திரங்களும் நிறைந்திருக் கின்றன என்பார்கள். அனுபவமும் அதுவாகத்தான் இருக்கும். “ஒரு காவியத்துக்கு ஆக்கம் தருவது காதலா, வீரமா? கம்பன் கண்ட இராமனிடம் சிறப்பாயிருப்பது அவனது அழகா, அறிவா, ஆற்றலா, உடன்பிறந்த தம்பியரில் சிறந்த தம்பி யார்? என்றெல்லாம் விவாதத்திற்குரிய பொருளைத் தேடித் தருவார். திருக்குறளிலும் சிலப்பதிகாரத்திலும் விவாதத்திற்குரிய விஷயங்கள் அதிகமாக இல்லை என்பது அவர்கள் கருத்து. திருப்பாவை, திருவெம்பாவை விழாக்களிலே, ஆண்டாளையும், மாணிக்கவாசகரையும் மோத விடுவதுண்டு. “காமம் கடிந்த காதல் வாழ்வில் தலைநின்றவர் ஆண்டாளா, மாணிக்கவாசகரா? அடுத்து, “அழுது அருள் பெற்றவர்” மாணிக்கவாசகர், அணைந்துஅருள் பெற்றவர் ஆண்டாள் - எவரது முயற்சி சிறந்தது? என்றெல்லாம் பொருள் அமைத்துக் கொடுப்பார்கள். ஒருமுறை சைவப் பற்று மிகுந்த அன்பர் ஒருவர் என் வாயால் மாணிக்கவாசகரை விட ஆண்டாள் தலை நின்றவள் என்று எப்படிக் கூறுவேன் - என்னை விலக்கி விடுங்கள் என்று