பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

விவாதத்திலிருந்தே விலகிக் கொண்டார். வைணவ அன்பர் ஒருவரும் ஆண்டாளை குறைத்துப் பேசுவது, அதை நான் கேட்டுக் கொண்டிருப்பது எல்லாம் மகா பாவம். அந்தப் பாவ காரியத்தை நான் செய்யமாட்டேன் என்று சொல்லிவிட்டார். இதற்காக எல்லாம் தொண்டமான் அஞ்சுவதில்லை. ஆண்டாளிடத்தில் உள்ள ஈடுபாட்டிலும், மாணிக்கவாசகரிடத்திலுள்ள பக்தியிலும் அவர் யாருக்கும் சளைத்தவர் அல்லர். இறைவனை அடைய அவர்கள் கையாண்ட முறைகளையும் மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது குறிக்கோள். அது இந்தப் பட்டிமண்டபத்தின் மூலம் நிறைவேறக்கூடும் என்று நம்பினார்.

சேக்கிழாரையும் அவர் விடுவதில்லை. திருத்தொண்டர் புராணத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு நாயன்மார்களை மோத விடுவார். என் தந்தையார் நடத்திக் கொடுத்த பட்டிமண்டபங்களிலேயே மிகச் சிறந்தது என்று நான் கருதுவது செயற்கரிய தொண்டு புரிந்த திருத்தொண்டர்களிலே சிறந்த செயல் புரிந்தவர் யார்? என்பதுதான்.

வாளால் மகவரிந்துட்ட வல்லேனல்லேன்

மாது சொன்ன சூளால் இளமை துறக்க வல்லேனல்லேன்

தொண்டு செய்து நாளாறில் கண்ணிடந் தப்பவல்லேனல்லேன்

நான் இனிச் சென்று ஆளாவ தெப்படியோ திருக்காளத்தி

அப்பருக்கே! என்ற பட்டினத்தார் பாடலை அடிப்படையாகக் கொண்டு சிறுத்தொண்டா, திருநீலகண்டர், கண்ணப்பர் மூவரது செயலையும் எடைபோட்டார்கள். கண்ணப்பர் கட்சியிலே நான் வாதாடினேன். வென்றதும், கண்ணப்பர்தான். ஆனால் தொண்டமானவர்கள் தமக்குப் பிடித்தமான பட்டிமண்டபம் என்று கருதுவது, கம்பன் கண்ட இராமனிடம் சிறப்பாயிருப்பது அவனது அழகா, அறிவா, ஆற்றலா என்பதைத்தான். கம்பனைப் போலவே, தொண்டமானும் இராமனது அழகிலே. அந்த இராம செளந்தர்யத்திலே வெகுவாக மனம் பறிகொடுத்தவர்கள். தொண்டமான் அவர்கள் தமது இறுதி நாட்களிலே மருத்துவமனையில் நினைவிழந்த நிலையிலே இருந்தபோது கூட இந்தப் பட்டிமண்டப உரையை அனுபவித்துச் சொன்னார்கள். மூச்சு குறைந்து கொண்டிருந்த அந்த நிலையிலும்.