பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 22

செந்தாமரைக் கண்ணோடும்

செங்கனி வாயினோடும் சந்தார் தடந்தோளொடும்

தாழ் தடக்கைகளோடும் அம்தார் அகலத்தோடும்

அஞ்சனக் குன்றம் என்ன வந்தான் இவன் ஆகும்

அவ்வில் இராமன் என்ற பாடலை அடிபிறழாமல் அனுபவித்துச் சொன்னபோது, கூடியிருந்தவர்கள் அனைவரும் அயர்ந்தே விட்டார்கள். அந்த உள்ளம் இராமனது அழகிலே எப்படியெல்லாம் ஈடுபட்டிருக்கிறது என்பதை உணர வேறு வார்த்தை வேண்டாம் தானே?

தொண்டமான் அவர்கள் தம்முடைய தீர்ப்புகளை எல்லாம் அசைக்க முடியாத தீர்ப்புகள் என்று கருதியதில்லை. காரைக்குடியிலே சிறந்த தம்பி பரதன் என்று தீர்ப்புச் சொன்னேன். கோவையில் இலக்குவனுக்குச் சொல்லுவேன். கல்லுப்பட்டியில் வீடணனுக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கப் போகிறேன் என்று துணிந்து சொல்வார்கள். கம்பரமாயணப் பாத்திரங்களிடத்திலே அவர்களுக்கிருந்த பட்சபாதமற்ற அன்பும், ஒரவஞ்சகமற்ற பரிவுந்தான் காரணம். யார் வென்றால் என்ன, கம்பன் படைத்த பாத்திரம் தானே வெல்கிறது. அது கம்பனுடைய வெற்றிதானே? என்றும் சொல்வார்கள்.

“தீர்ப்புக்களில் பரிவு மாத்திரமல்ல, தொண்டமானுக்கே உரிய பக்தியும், இலக்கிய ஆர்வமும், எளிமையும், சுகமும் விரவிக் கலந்து பரிமளிப்பதை நுகரலாம். சில கட்டங்களில் யாருக்குத் தீர்ப்பளிப்பது என்ற துணிய முடியாமல் தத்தளித்துப் பின் மனசை திடப்படுத்திக் கொண்டு ஒரு பக்கமாகச் சாடுவதைப் பார்த்து அனுபவிக்கலாம். வேறு சில சமயங்களில் தீர்ப்பின் முடிவை நாம் முன்னமேயே எதிர்பார்த்துவிடாதபடி பாய்ச்சல் காட்டி, நம்மை ஏமாற்றி நாம் எதிர்பாராத சமயம் எதிர்பார்த்த முடிவைக் கூறும் சதுரப்பாட்டையும் காணலாம். சில சமயங்களில் தர்ம சங்கடத்தில அகப்பட்டுக் கொண்டு அவதியுற்று, ஒரு மேற்கோளின் உதவி கொண்டு அவர் அல்லல் நீக்கம் பெறுவதையும் பரிவோடு பார்த்து மகிழலாம். எந்தக் கோணத்திலிருந்து பாாத்தாலும், பாஸ்கரத் தமிழ் நம் உள்ளத்துக்கு வியப்பூட்டிக் களிப்பூட்டுகிறது. அது போதாதா?