பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 225

நண்பர்கள் ஒரு புறமிருக்க, தொண்டைமானிடத்திலே பக்தி செலுத்துகிற அன்பர்களும் இருக்கிறார்கள். நெமிலி ரெவினியூ இன்ஸ்பெக்டர் சண்முகம் (சிந்தனா), ரா. ஜகத்ரட்சகன், நுங்கம்பாக்கம் ராகவன், முதலியோருக்குத் தொண்டைமானிடத்திலே கரை காணாத பக்தி. தொண்டைமானுக்கு மணி விழா என்றால், ஏதோ தங்களுக்கே விழா எடுக்கிற மாதிரி உற்சாகமும், உவகையும் அடைகிற உள்ளங்கள் அவை,

எனக்குத் தெரிந்த நண்பர்கள் போக, தெரியாத நண்பர்கள் எத்தனையோ பேர். அவர்களையெல்லாம் இங்கே குறிப்பிடாமல் விட்டுவிட்டேன் என்றால், அதற்கு என் அறியாமைதான் காரணம். நண்பர்கள் பட்டியல் இதோடு முடிந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. அறுபது வயதுக்கு மேலும்கூட, புதுப்புது நண்பர் களையும், சகோதரர்களையும் தொண்டைமான் தேடிக்கொண்டால் அதில் ஆச்சர்யப்படுவதற்கில்லை. “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற தமிழ்ப் பண்பாட்டிலே ஊறியவர்களாச்சே

மன்மதன் கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பம்