பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 233

ரசிகமணியின் எடுப்பான முகத்தை ரசித்தார்கள். அகன்ற நெற்றியை ரசித்தார்கள். ஒளி வீசும் கண்களை ரசித்தார்கள். வாரிவிடப் படாமல் சில்லென்று பூத்துக் கிடக்கும் கிராப்பை ரசித்தார்கள். அதிகம் சொல்வானேன், செழித்து வளர்ந்த மீசையையுமே ரசித்தார்கள்.

ரசிகர்களுக்குள்ளே மணியாக விளங்கிய ரசிகமணியையே ரசிக்கத் தெரிந்த பரம ரசிகர் தொண்டைமானவர்கள். அந்த ரசிகமணியை இந்த ரசிகர் எவ்வளவு தூரம் மதித்திருக்கிறார் என்பது, பின்வரும் வரிகளில் தெரியும்.

“ஆயிரம் வருஷங்களுக்கு ஒரு முறைதான் ஒரு மகா கவி தோன்றுகிறான் என்றால் இரண்டாயிரம் வருஷங்களுக்கு ஒருமுறைதான் ரசிகமணி டி.கே.சியைப் போன்ற ஒரு மகா ரசிகர் தோன்றுகிறார்” என்று சொல்லுவார்கள். அவர்கள் எழுதியுள்ள ரசிகமணி டி.கே.சியைப் படித்துப் பார்த்த பேராசிரியர் கல்கி சொன்னார்.

“கவிதையையும் கவிஞரையும் பற்றி ஒருவாறு ரசமாக எழுதிவிடலாம். கஷ்டமானாலும் அசாத்தியமான காரியம் அல்ல. ஆனால் ஒரு ரசிகரைப் பற்றியே ரசமாக எழுதுவது எல்லோராலும் முடிகிற காரியம் அல்ல. ரசிகரை உணர்வதற்கு ரசிகத்தன்மை வேண்டும். அவரைப் பாராட்டுவதற்கு விசால மனப்பான்மை வேண்டும். அவரைப் பற்றி ரசமாக எழுதுவதற்கு அசாதாரணமான திறமை வேண்டும். தொண்டைமான், டிகேசியை எவ்வளவு நன்றாக அறிந்திருக்கிறார். அவருடைய பிரசங்கத்தை எவ்வளவு நுட்பமாகக் கவனித்துக் கேட்டிருக்கிறார் என்பதெல்லாம் புத்தகத்தைப் படிக்கும்போதுதான் தெரிகிறது” என்று பாராட்டியிருக்கிறார்.

தொண்டைமான் காட்டிய அன்பை எல்லாம் ரசிகமணி எப்படி ஏற்றுக்கொண்டார்கள், எப்படி அதைப் போற்றினார்கள் என்பதை எல்லாம் அவர்கள் தொண்டைமானுக்கு எழுதிய கடிதம் ஒன்றின் மூலமே அறியலாம். -

“மனதில் உண்டான எழுச்சிகளை எல்லாம் அப்படி அப்படியே கொட்டிவிட்டீர்கள். கொஞ்சம் குறைத்துக் கொண்டிருக்கலாமே என்று அடிக்கடி தோன்றத்தான் செய்கிறது. ஆனால் கரை புரண்டு வரும் அன்பை யார் தடுக்க,