பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# பூ, இலாகாவினரிடை மக்களிடையேயும் புது விழிப்பையும் உற்சாகத் ஊட்டிவிட்டன. நான் முந்தி நீ முந்தி என்று சிலைகளைக் வந்து குவித்தார்கள். பழைய அரண்மனையின் ஒரு பகு இவை குடியேறின. சிற்பங்களுக்கேற்ப பீடங்களும், விளக்கங்களும்

அமைக்கப்பட்டன. குறைந்த கால அளவில் கவினார் கலைக்கூடம் ஒன்று உருவாகிவிட்டது, தொண்டைமானவர்களது விடாமுயற்சியால், * - - ” . - : , : ;” பொருளாதார நிலையைச் சரிக்கட்ட கலை விழாக்களும் நடத்தப் பெற்றன. தஞ்சையில் இதுபோல முன்னும் நடந்ததில்லை. பின்னும் நடந்ததில்லை என்னும் அளவுக்கு புகழ் பெருகியது. கலைக் கூடத்திலே இன்று சேர்த்து வைக்கப்பட்டுள்ள கலைச் செல்வங்களின் மதிப்பு சுமார் மூன்றரைக் கோடி ரூபாய் என்று மேல் நாட்டு

நிபுணர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள் என்றால் தொண்டைமான்


அவர்களின் பணியின் உயர்வையோ சிறப்பையோ பற்றி நான் சொல்ல வேண்டியதில்லையல்லவா?

திரு. தொண்டைமான் அவர்களுடைய நேர்மைக்கும், நெறி

- - - - - - - w * ஆ -

திறம்பாத் தன்மைக்கும் கண்டிப்பும். அதே சமயம் கனிவும்

கருணையும் நிறைந்த போக்குக்கும், ஆற்றிய பணியின் வெற்றிக்கும்

அடிப்படையாக அமைந்த ஒரு பெருந்தத்துவம் மனிதாபிமானமே.

தன் பணியில் ஏற்படுகின்ற எப்பேர்ப்பட்ட சிக்கலையும் மனிதாபிமான அடிப்படையில் தீர்த்து விடுவார்கள்.

1941 ஆம் ஆண்டு நடந்த சம்பவம். இடம் சிறைச்சாலை, அதிகாலை நேரம். பல அரசியல் கைதிகள் கூடி நின்று செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருக்கிறார்கள். திரு. சா. கணேசனும் அவர்களில் ஒருவர். ஒரு செய்தித் தலைப்பு எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தது. ‘காதலுக்கு ஜாதி மத பேதமில்லை என்பதே தலைப்பு. ஒரு மாஜிஸ்ட்ரேட் ஒரு கிரிமினல் கேசில் அளித்த தீர்ப்பை அறிவிக்கும் செய்திக்குரிய தலைப்பு. இம்மாதிரி எல்லாம் துணிந்து சொல்லக்கூடிய மாஜிஸ்டிரேட் இன்று தமிழ்நாட்டிலே ஒருவர்தான் உண்டு. அவர். திரு. பாஸ்கரத் தொண்டைமான்தான்” என்று உறுதியாகக் கூறினார் திரு. சா. கணேசன். உள்ளே படித்துப் பார்த்தால் அவர் கூறியது உண்மை என்று தெளிவாகியது.

வழக்கு இதுதான். ஒரு பெண் கத்தோலிக்க மதத்தைச்

சேர்ந்தவள். ஒரு பையன். அவன் இந்து மதத்தைச் சேர்ந்தவன். உள்ளங்கள் ஒன்றுபட்டன. கல்யாணத்துக்கு மதமும், மதக்