பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24) கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

காவலர்களும் குறுக்கே நின்றார்கள். பெண்ணும் பையனும் எல்லோர் சம்மதத்தையும் பெற ஆனமட்டும் முயற்சி செய்தார்கள். பலனில்லை. வேறு வழியில்லாமல் ஊரும் உறவினரும் அறியாமல் அயலூர் சென்று திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை ஆரம்பித்தார்கள் கத்தோலிக்க மத குருமார் தோல்வியை எளிதில் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. மைனர் பெண்ணைக் கடத்திச் சென்றுவிட்டான் என்று வழக்குத் தொடர்ந்தார்கள். வழக்கை விசாரித்தார் மாஜிஸ்டிரேட் தொண்டைமான். தமிழ் மரபையும் பண்பையும் உணர்ந்தவர்களாகை யினாலே, இளம் உள்ளங்களுக்குச் சாதகமாகவே அமைந்தது அவர்களது தீர்ப்பு. அந்த உள்ளங்கள் இரண்டும் நெஞ்சில் நினைவுள்ளவரை வாழ்த்திக்கொண்டு தானே இருக்கும்.

இன்னொரு சம்பவம். வட ஆற்காடு மாவட்டக் கலெக்டராகப் பணியாற்றிய போது நடந்த விஷயம். மாவட்டக் கலெக்டர்கள்தான் ரோட் ட்ரான்ஸ்போர்ட் அதாரிட்டி மாவட்ட அளவில் பஸ்ருட் கொடுக்க வேண்டியது அவர்களுடைய பொறுப்பு. பெரும்பாலும் பணம் படைத்தவர்களும், செல்வாக்கு மிகுந்தவர்களுமே வருஷா வருஷம் ரூட் வசதி பெற்றுக் கொண்டிருந்தார்கள். புதியவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்க வழியே இல்லாமல் செய்துவிட்டார்கள் பணம் படைத்த பெரியோர்கள். இந்தத் துறையிலே ஒரு புது சகாப்தத்தையே உண்டாக்கிய பெருமை தொண்டைமானவர்களையே சாரும்.

தொழிலாளர்கள் சிலர் கூடி ஒரு ஸ்தாபனத்தை அமைத்துக் கொண்டு, அதன் சார்பாக ருட் வசதி கேட்டார்கள். இதற்குப் பஸ் முதலாளிகள் பலரும் எதிர்ப்பு. தங்கள் தொழில் திறமையை நம்பி முன்னுக்கு வரத் துடிக்கும் ஒரு சிறு கூட்டம். ஆரம்பத்திலேயே, தலையெடுக்கவிடாமல் அவர்களை நசுக்கி விடத் துடிக்கும் ஒரு பெருங்கூட்டம். இரண்டுக்கும் இடையில் ரோட் டிரான்ஸ்போர்ட் அதாரிட்டி இங்கே அவர்களுடைய மனிதாபிமானம் ஓங்கி நின்றது. ஏற்றுப் பேச எவருமில்லாத தொழிலாளர் கூட்டத்துக்குத் துணிந்து ரூட்டைக் கொடுத்தார்கள். ஏழை எளியவர்களும் உழைப்பால் உயரலாம் என்பது ஸ்தாபிதமாகிவிட்டது. உழைப்பால் உயர்ந்த அந்தத் தொழிலாளர்கள் இன்றும் தொண்டைமானை நன்றியுடன் நினைக்காத நாள் கிடையாது.

மனிதாபிமானம் ஒருபுறம் இருக்கட்டும். எந்த ஒரு விஷயத்தையும், சிக்கலையும் நகைச்சுவை நோக்கோடு பார்த்துப் பெரிதாகப் பாராட்டாமல் எளிதாகத் தீர்த்து வைக்கும் சாமர்த்தியமும் தொண்டைமான் அவர்களிடம் உண்டு. ஓர் உதாரணம். அடி நாளிலே