பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

ரெவினியூ மகா சமுத்திரத்திலேதான் தொண்டைமானையும் தூக்கிப் போட்டார்கள். அலைகளும், திமிங்கிலங்களும், சுறாக்களும் தொண்டைமானை எதுவுமே செய்ய முடியவில்லை. கல்லைக் கட்டிக் கடலில் தள்ளினாலும் மிதந்து விடக்கூடிய அப்பர் பெருமானுடைய பக்தராச்சே அப்படிப்பட்டவர்களுக்கு நல்ல தோணியும் துடுப்பும் கிடைத்துவிட்டால் கேட்கவா வேண்டும். தமிழும் கலையும் துணையிருக்கும் போது, இந்த சமுத்திரம் என்ன. எந்த சமுத்திரத்தையும் கடந்து வெற்றி வீரராய் மீண்டுவிடும் ஆற்றல் அவர்களுக்கு நிறைய உண்டு.

எத்தனை ஆண்டுகள்தான் வேலை பார்த்தால் என்ன, பதவியி லிருந்து ஓய்வு பெறுவது என்றால் பலருக்கு சங்கடமாகத் தானிருக்கிறது. ஏன்தான் வயது கூடுகிறதோ என்றும் மார்க்கண்டேயர்களாகவே இருந்தோமில்லையே, எப்போதும் பதவியில் இருக்கலாமே என்றெல்லாம் ஏங்குவார்கள். பதவி போனால், வருவாய் போய்விடுமே, செல்வாக்குப் போய் விடுமே, அதிகாரம் போய்விடுமே என்றெல்லாம் பரிதவித்துவிடுவார்கள். சிலர் முன்னெச்சரிக்கையாய் ஓய்வு பெறு முன்பிருந்தே, வேறு உத்தியோகத்துக்கு, முயற்சித்து ஓய்வு பெற்றதும் உத்தியோகத்திலும் அமர்ந்து கொள்வார்கள். இப்படி எல்லாமிருக்க, ஒரு மாவட்டக் கலெக்டர் பதவியிலிருந்த போதும், ஓய்வு பெறும் நாள் என்று வரும் என்று வரும் என்று எதிர்நோக்கி வரவேற்று, அந்த விடுதலை நாளை நன்னாளாகக் கொண்டாடிய ஒரே அபூர்வ மனிதர் திரு. தொண்டைமான் அவர்கள்தான், எனக்குத் தெரிந்தவரையிலே அரசு இல்லை என்றவுடன் இராமன் எவ்வளவு உற்சாகமாகக் கிளம்பினானோ அவ்வளவு உற்சாகமாக ஓய்வை வரவேற்றுக் கிளம்பினார்கள் இவர்களும்.

உருளுடைச் சகடம் புண்ட

உடையவன் உய்த்த கார் ஏறு அருளுடை ஒருவன் நீக்க

அப்பிணி அவிழ்ந்தது ஒத்தான் என்று நாமும் கம்பனோடு சேர்ந்து பாடலாம்தானே.