பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



எந்தையும் தாயும்

.


(


அப்பா கலந்து கொள்ளுகிற திருமணங்களில் எல்லாம் மணமக்களுக்கு ஒரு அறிவுரை தயாராய் வைத்திருப்பார்கள். A Husband and wife should not be competitve but they should be cornpimentary என்று சொல்வார்கள். கணவன் சிவப்பாக இருந்தால் மனைவி கருப்பாக இருக்க வேண்டும். மனைவி சிவப்பாக இருந்தால், கணவன் கருப்பாக இருக்க வேண்டும். அப்போதுதான் பொருத்தம் நன்றாக இருக்கும். இறையுருவங்களே அப்படித்தான் இருக்கின்றன. சிவபெருமான் சுடர்மேனியன் அன்னை உமாதேவியோ நல்ல கருப்பாயி. திருமால் கார்மேக வண்ணன் அவன் தேவி லகடிமியே செந்தாமரை நிறத்தாள். முருகன் செம்மேனி அழகன். அவனுக்கு வாய்த்த குறமகள் வள்ளியோ நேர் எதிரிடை. அப்படியேதான் ராமனும் சீதையும். மதனும் ரதியும். ஜோடிகள் அப்படி அமைவதிலேதான் ரஸ்மும் இருக்கிறது” என்று விளையாட்டாகச் சொல்வார்கள்.

‘என்னடா, தொண்டைமான் இப்படிச் சொல்கிறார் என்று விஷயம் தெரியாதவர்கள் முழிப்பார்கள். தெரிந்தவர்களே, சரிதான் ஆசாமி சப்பைக் கட்டு கட்டுகிறார் என்று புரிந்துகொள்வார்கள். ஏனென்றால் அப்பா நல்ல கருப்பு அம்மா நல்ல சிவப்பு. அவர்கள் கணக்குப்படி ஜோடிப் பொருத்தம் சரிதானே?

அப்பாவுக்குத் திருமணம் நடக்கிறபோது கல்லூரி மாணவன் தான். அவர்களுக்கு, அம்மா ஒருவகையில் முறைப்பெண்ணாக வேண்டும். பரம்பரையாகவே உறவினர்கள். பெண் கேட்டும் தொலைதுாரம் செல்ல வேண்டிய சிரமமும் இருக்கவில்லை. திருநெல்வேலியிலிருந்து மூன்று கல் தொலைவில் உள்ள பாளையங்கோட்டைதான் அம்மா பிறந்து வளர்ந்த ஊர். அப்பாவின் குடும்பத்தைப் போலவே அம்மாவின் குடும்பமும் சீரும் சிறப்பும்