பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

நிறைந்து விளங்கிய குடும்பம். என் தாய்வழிப் பாட்டனார், திரு. மனக்காவலத் தொண்டைமான், அந்த நாளில் பெரிய காண்ட்ராக்டர் என்று பெயர் எடுத்தவர்கள். திருநெல்வேலி ஸாப்டர் உயர்நிலைப் பள்ளியும், பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபமும் அவர்கள் திறமைக்குச் சான்றாக இன்றும் விளங்குகின்றன. அதற்காக கவர்னரிடமிருந்து தங்கத்தோடா பரிசும் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்குப் பெயரே மங்களா வீடு தான்.

அப்படிப்பட்ட செல்வாக்கு மிகுந்த குடும்பத்திலே ஐந்தாவது பெண்ணாகப் பிறந்த செல்வி பாலம்மாளைத் தான் சிரஞ்சீவி பாஸ்கரன் கரம்பிடித்தார் முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு. அம்மாவும் எட்டாவது வரை படித்து ஆசிரியைப் பயிற்சியும் பெற்றவர்கள். கல்யாணமான புதிதில் குழந்தைக் குட்டி என்றெல்லாம் ஏற்படாத காலத்தில், அப்பாவின் இலக்கிய சேவைக்கு ஓரளவு ஒத்தாசையாகவும் இருந்திருக்கிறார்கள். அப்பா எழுதும் கட்டுரையெல்லாம் Fair Copy பண்ண வேண்டியது அம்மாவின் வேலை. இப்போதெலலாம் அந்த ஜோலிக்கே போவதில்லை.

நிறத்தால மட்டுமல்ல, குணத்தாலும் பழக்கழக்கங்களாலும், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அப்பாவுக்குக் காப்பி என்றால் உயிர். அதைப் பக்குவமாய்த் தயாரித்துக் கொடுக்கிற அம்மாவுக்கோ அந்த வாசனையே ஆகாது. ப்யா எவ்வளவு சீரியசான விஷயமாக இருந்தாலும் லகுவாக எடுத்துக் கொள்வார்கள். அம்மா அப்படியில்லை. துரும்பைத் துணாகவும், கடுகை மலையாகவும் நினைத்துக்கொண்டு அவஸ்தைப் படுவார்கள். குடும்பம், குடும்ப காரியங்கள் என்றெல்லாம் அதிகம் மனதை அலட்டிச் கொள்ளமாட்டார்கள் அப்பா, குழந்தைகள் யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால் கூட, எட்ட நின்றே பார்த்துவிட்டுப் போய் விடுவார்கள். ஆனால் அம்மாவுக்கோ குடும்பம்தான் சகலமும். அதற்காக உழைக்கவும், கவலைப்படவுமே பொழுதெல்லாம் சரியாயிருக்கும். நான்கு மக்கட் செல்வங்களைப் பெற்றார்கள். ஆனால் இன்று தங்கை ராணியும், தம்பி கருணாகரனும் எங்கள் உள்ளங்களிலேதான் வாழ்கிறார்கள். வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்பட்ட இந்தப் பேரிடிகளையெல்லாம் இறைவன் திருவுள்ளம் என்று அப்பா சமாளித்துக் கொண்டார்கள். தாயுள்ளத்தால் அப்படியெல்லாம் சமாளிக்க முடியாதுதானே. இன்று அவர்கள் இருவருக்கும் துணையாக பேரன் பால பாஸ்கரன் அவர்களுடனேயே இருக்கிறான்.