பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம்

5

2

பொருள் சேர்ப்பதிலே இருவருக்கும் எப்போதும் அவ்வளவு அக்கறை இருந்ததில்லை. நேர்மையான வழியில் கிடைக்கிற சம்பாத்தியமே நிலைத்தால் போதும் என்று நினைக்கிறவர்கள் இருவரும். தம்மால் இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்ய வேண்டும் என்ற நல்ல பண்பும் அவர்களிடத்திலே அன்றும் இன்றும் இருக்கிறது. இன்னா செய்தார்க்கும் அவர் நாண நன்னயம் செய்யும்

நல்ல குணத்தையும் எத்தனையோ முறை கண்டிருக்கிறேன்.

அப்பா உத்தியோகத்திலிருந்த காலத்தில், எப்போதும் நண்பர்களும் உறவினர்களுமாய் வீடு நிறைந்திருக்கும். அம்மாவுக்கும் சதா வேலை இருந்து கொண்டே இருக்கும். அப்பா எதிர்பாராதவிதமாகவும் யாரையாவது விருந்தினராக அழைத்து வருவதுண்டு. தன்னுடைய சொந்த அசெளகரியத்தை எல்லாம் பொருட்படுத்தாமல் வந்தவர்களை வரவேற்று உபசரிக்கும் பண்பு அம்மாவிடம் இருந்தது. வீட்டையும் விருத்தினர்களையும், அப்பாவையுமே கவனிக்கும் பொறுப்பை அம்மா ஏற்றுக்கொண்டதால் அப்பா நிர்விசாரமாய் இலக்கியத் தொண்டு புரிய வசதியாக இருந்தது என்று சொன்னால் அது மிகையே அல்ல.

சாப்பாட்டை அல்ல, அல்ல சாப்பாட்டு நேரத்தைப் பொறுத்தவரையில் அப்பா ரொம்ப கரெக்ட். பசித்துப் புசி என்பதெல்லாம் அவர்களுக்கு உடன்பாடில்லா விஷயம். மணி ஆயிற்றா இலையைப் போடு என்று சொல்லக் கூடியவர்கள். சாப்பாட்டிலும், உப்பு, காரம் இரண்டும் வெகு குறைவாக இருக்க வேண்டும். கொஞ்சம் காரம் சேர்ந்துவிட்டாலும் தொலைந்தது. மிளகாயை அரைத்துக் கலக்கியிருக்கிறீர்களே, மனுஷன் சாப்பிட முடியவில்லையே என்று காரமாய்ப் பேசுவார்கள். கவிதையைக் காரசாரமாய் ரசிக்கிற அப்பா, சாப்பாட்டை உப்புச் சப்பில்லாமல் சாப்பிடுகிறார்களே என்று பரிதாபமாக இருக்கும் எங்களுக்கு மற்ற வீடுகளிலே பாருங்கள், அரைமணி ஒருமணி நேரத்திற்குள் சமைத்துப்போட்டு விடுகிறார்கள். உங்களுக்குத்தானே இரண்டுமணி மூன்று மணி என்றாகிறது என்பார்கள். அதெப்படி சமைப்பார்களோ, அரைமணி நேரத்தில், வெந்ததும் வேகாததுமாய்ப் போடுவார்களோ என்னமோ!

அப்பா அடிக்கடி சொல்வார்கள். கணவனுக்கும்

மனைவிக்குமிடையே விட்டுக் கொடுக்கும் தன்மை வேண்டும் என்று. சொல்வதென்னவோ அப்பா என்றால், விட்டுக் கொடுப்பதெல்லாம்