பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

ஸ்ரீரங்கநாதர் மாலைப் பாடல்கள் முப்பதுமே அச்சிடப் பெற்றிருக்கின்றன. அதில் ஒரு பாடல்,

பண்டங்கொண்டு படர்ந்திழி காவிரி
வண்டல் நின்று வளர்ந்திடு தெங்குபோய்
அண்டர் கோனுக்கு அமர் நிழலாகவை
குண்டம் என்று குலவிடும் ரங்கமே

.

இத்தோடு, நெல்லைப்பள்ளு என்று சுவை மிகுந்த பள்ளு ஒன்றையும் பாடியிருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக அதன் கையெழுத்துப் பிரதி கூட இப்போது அகப்படவில்லை. என்றாலும் அதில் ஒரே ஒரு பாட்டு மட்டும் எங்கள் தந்தையார் நினைவிலிருக்கிறது.

உமிழ்மது துன்று கொன்றையார்
விடைகொண் டெங்கும்திரிபவர்
உமையாள் கொழுநன் உலகசயனன்
கலையாள் கொழுநன் உபயர் அறிதற் அரியவர்

அமிழ்தினின் சுவை பனுவல் மூவருக்கு
அரிய நற்பதம் அளிப்பவர்
அயிலை நிகர்த்த விழியாள் காந்தி
மதியோடமர்ந்த நெல்லையர்

தமிழ் தருமுனி மலையினின்றிழி
தாமிரபருணியாய் கழனியில்
தழைகொள் தொழியில் மிதிகொள் பள்ளர்
சரசமொழிகள் மொழியவே.

குமிழ்த்த முலையைக் காட்டி நின்று
குறைப் பொழுதையும் போக்குறீர்
குரவை ஒலித்து முடியை அவிழ்த்து
குனிந்து நடுங்கள் பள்ளியரே.

என்பதுதான் அந்தப் பாட்டு.

இந்தச் சிதம்பரத் தொண்டைமானின் சீமந்த புத்திரர்தான் எங்கள் பாட்டனார் தொண்டைமான் முத்தையா அவர்கள். அவர் சிறந்த சித்ரீகராக வாழ்ந்தவர்கள் சென்னை சித்திர கலாசாலையில் வேலாயுத ஆச்சாரியாரிடம் மாணவனாகப் பயின்றிருக்கிறார்கள்.

திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சித்திர ஆசிரியராக முப்பத்தைந்து