பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைக் களஞ்சியம் 25


வருஷம் பணியாற்றியிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குச் சித்திரப் பயிற்சி கொடுத்து ஆசிரியர்களாக்கி யிருக்கிறார்கள். இது எல்லாம் காலம் செல்லச் செல்ல மறந்துவிடக் கூடியதுதான். சிறந்த கவிஞர் பரம்பரையில் வந்தவர்கள் ஆனதால் கவிதையை அனுபவிக்கும் ஆற்றலோடு கவிதை இயற்றும் திறனும் பெற்றிருந்திருக்கிறார்கள். இராமலிங்க அடிகளாரின் பாடல்களையே பாடிப்பாடி செம்பாகமாக அடிகளாரைப் போலவே பாடவும் வல்லவர்களாக இருந்திருக்கின்றார்கள். அவர்கள் பாடியவை திருவொற்றியூர் தியாகேசர் காதல், நெல்லை நாயகர் குறம், அருள் கடன் விண்ணப்பம், ஆட்கொண்ட பதிகம், பகவத் கீதை அகவல் முதலியன. அவைகளில் இரண்டே இரண்டு பாடல்கள் மட்டும் அடியில் கொடுத்திருக்கிறேன்.

தெருவீதி விளையாடித் திரிந்தலையும் காலம்
தெய்வரம்பை நானெனவே சிந்தையுறச் செய்தே ஒருவழியும் கண்டிலேன் பாவிமகள் ஆணை
உனையல்லால் ஆதரிப்பார் ஒருவரிலை என்றே வருவழி நினையாதே பெண்ணங்கே என்றார்
மறுமொழி ஒன்றுரையாதே மயக்கமுற்றேன் அவர்பால் பெருவெளியில் புகுகின்றார் என்னை ::இவண்விட்டே பேதையரோ? ஒற்றிநகர் பெருமான் என்தோழி.

காமவியல் சிறிதுமிலாக் காலமதில் வந்து
கண்ணாளன் எனையன்றிக் கலக்காதே என்றார் நாமமென்னோ என்றவரை நான்விரும்பிக் கேட்டேன்
நாம்நெல்லை நாதர் என்றார் நாணக்கைபிடித்தார்
சேமமுறத் தில்லைசென்று வாழ்கின்றார் என்னே?
தேட்டமுறு காலமதில் தேடிஎனை அணையார்
வாமமதில் எனைவைத்து வாழ்விக்கும் காலம்
வருமோ சொல்?வாராதோ? வகுத்துறை நின்குறமே.

இப்படி தியாகேசர் காதலையும், நெல்லை நாயகர் குறமும் பாடிய எங்கள் பாட்டனார், பின்னர்ச் சமய ஆராய்ச்சியில் ஈடுபட்டு கிறிஸ்துவ சகோதரர்களோடு பழகியிருக்கிறார்கள். பிரம்ம சமாஜத்தில் சேர்ந்திருக்கிறார்கள். கடைசியில் ராதாஸ்வாமி சத் சங்கத்தில் சேர்ந்து யோகப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். இத்தகைய இலக்கிய குரு பரம்பரையில் வந்தவர்களே எங்கள் தந்தையார். ஆதலால் அவர்களுக்கு இலக்கிய உணர்வு, கலை