பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்


வாழ்வு எல்லாம் பிதுரார்ஜிதமாகக் கிடைத்திருக்கிறது. இவர்கள் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் இவர்களுக்கு ஆசிரியராக அமைந்தவர் குற்றாலக் குறவஞ்சிப் பாடிய திரிகூட ராஜப்பன் கவிராயர் பரம்பரையில் வந்த மேலகரம் சுப்பிரமணியக் கவிராயர் அவர்கள். அவர்களிடம் இவர்கள் கேட்டு அனுபவித்த தனிப்பாடல்கள் எண்ணில் அடங்கா. பள்ளியை விட்டு வெளியேறுகிறபோது சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களோடு சேர்ந்து கம்பராமாயணம் படித்திருக்கிறார்கள். பின்னர்தான் ரசிகமணியின் சீடராய் அமைந்து கவிதை என்றால் என்ன? கம்பன் என்றால் யார்? என்றெல்லாம் தெரிந்து கொண்டார்கள். அதன் பின்னர்தான் சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் உருப்பெற்றிருக்கிறார்கள்.

இந்தப் பரம்பரையின் புகழ் நாளும் வளர இறை அருளை இறைஞ்சி நிற்கின்றேன் நான்.


நாடோடி நடனம்
கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பம்