பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- iAAA AAAA S AAAAA AAAA AAAA AAAA ST SAAAA AAAA AAAAA : *f;. கலையின் பாஸ்கந்த தாண்டைமரன்

ம் கூட இறைவன் தன்மையைப் புலப்படுத்த பல்வேறு காலங்களில், பல்வேறு துறைகளில், வேறு புலவர்களால் முன்னர் பாடப்பெற்ற தனிப்பாடல்களைத் திரட்டித் தொகை நூல் (Anthology; ஆக்கினார்கள் பின் வந்தவர்கள். அவர்கள் கூட அதற்கு, இறைவணக்கம் இன்றியமையாதது என்று

. . - - - * / * } . ...b. & கருதி எழுதிச் சேர்த்தனர் என்றால் நாட்டு மக்களின் மனத்தில் : ச்சி எவ்வளவு ஊறிக்கிடக்கிறது என்பதைச் சொல்லவா

  • 3 :” -: go s’. •.

தமிழ்நாட்டுத் தொன்மையும், தட்ப வெப்பமும், சூழ்நிலையும். உண்டி முதலியனவும், சேர்ந்து மக்களை எளிய வாழ்வினராகவும் உயர்ந்த பண்பினராகவும் ஆக்கிவிட்டன. அந்த மனப்பண்பின் சிகரமே இன்று தமிழ்நாடு முழுவதும் வானளாவிய விமானங்களுடனும் கோபுரங்களுடனும் கோயில்களாக ஓங்கி உலகறிய விளங்குகின்றன. கருக்கமாகச் சொன்னால் மற்ற எல்லா மாநிலங்களிலும் உள்ள கோயில்கள் அனைத்தையும் எண்ணிக் கூட்டிப் பார்த்தால் தமிழகம் ஒன்றில் மட்டும் உள்ள கோயில்களின் தொகைக்குக் குறைவேதான். இது உண்மை. வெறும் புகழ்ச்சி அல்ல.

அதனாலேயன்றோ, மாணிக்கவாசகப் பெருமான் எந்நாட்ட


வருக்கும் இறைவனாய் உள்ளவனை, தென்னாடு உடைய சிவன்


என்றுரைக்கிறார். சிவன் என்றால் ஏதோ பூச்சுக்காரர்களுக்கே

உரியவன் என்று கொண்டு நாம் இடர்ப்பட வேண்டாம். சிவன் என்றால் நன்மை பயப்பவன். நன்றுடையான் என்றே பொருள்.

கடவுளைக் குறிக்கும் ஆயிரக்கணக்கான பெயர்களுள் சிவன் என்பதும் ஒன்று. அந்தக் கடவுள் தென்னாட்டையே தன்னாடாகக் கொண்டு விட்டானாம். அதையே சிவலோகமாகவும் ஆக்கிக்கொண்டு விட்டானம் அந்த அப்பு ஆர் சடையப்பன். நல் உலகம்’, ‘சிவலோகம் இரண்டும் ஒரு பொருளையே தருவன என்பதை யாரே அறியார்?

ஏன் இறைவன் தமிழ்நாட்டைத் தன்னாடாக ஆக்கிக் கொண்டான்? இங்குதான் பண்ணோடு தமிழ் பாடும் பக்த மணிகள் பல்வோர் இருக்கின்றனர். சொல்லிலும், பொருளிலும் எல்லையில்லாப் பரம்பொருளைக் காண்பவர்கள் இருக்கின்றனர். “பார்க்குமிடம் எங்கனும் நீக்கமற நிறைந்துள்ளான், போக்கும் வரவும் இல்லாப் புண்ணியன் என்றுணர்பவர்கள் நிறைந்திருக்கிறார்கள்.

- * - அதற்கெல்லாம் மேலாக, பாடலொடு ஆடல் பயின்றிடவும், “... , , , , , to or -ே ... * - > 4. வேதமொடு ஆகம விழுநூல் கற்றிடவும், சிற்ப முதலிய தெய்விகக்