பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம்

கலைகளைத் தேர்ந்திடவும், வணிக நீதி மன்றங்கள் கூடிடவும். எல்லாக் கலையும், எல்லாப் பணியும், எல்லாப் பொருளும் ஈசனதே என்னும் மெய்யுணர்வு மலர்ந்திடவும், தக்கதோர் இடமாய் தழைத்தவை கோயில்கள். கல்வியால் அறிவும், அறிவால் ஒழுக்கமும் வளர்ந்து அவை கலையாய் மலர்ந்து இன்ப மணம் பரப்பி மக்களை மக்களாக வாழ வைப்பதும் கோயில்கள்தாம். ஆதனாலன்றோ கோய இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதை உலக நீதியாய்க் கொண்டனர் தமிழ்ப் பெரு மக்கள். அந்த நீதிப்படி ஊர்கள் தோறும் கோயில்கள் ஓங்குவதாயிற்று. கோயில் மிகுதியால் மக்களின் சீல பண்பும் சிறந்து, வாழ்வும் உயரலாயிற்று.

அத்தகைய நல் உலகத்தில், சிவலோகத்தில், ஆம் இந்தத் தமிழ்நாட்டில் நிறைந்து சிறந்து பயன்கொழிக்கும் கோயில்கள் எத்தனை எத்தனையோ, சிற்பத் திறமை, கலை நுணுக்கம், மூர்த்தி அழகு, உருவ அமைதி, பாவப்பொலிவு, தத்துவச் செறிவு முதலிய வேறுபாடுகள்தாம் எத்தனை எத்தனையோ, தல மகிமை, தீர்த்தச் சிறப்பு, வரலாற்றுப் பெருமை, புராணக் கோட்பாடு, இன்னும் என்னென்னவோ அருமைப்பாடுகள். இவற்றையெல்லாம் நானும் நீங்களும் எப்படி கண்டு, அறிந்து துய்த்து மகிழ முடியும்? இதற்கென்று எங்காவது பள்ளிகள் உண்டா? அல்லது ஏதாவது பாடம் சொல்லும் வகுப்புகளாவது உண்டா?

நாமுந்தான் கோயில்களுக்குப் போகிறோம். பக்தியில் நாம் யாருக்கும் குறைந்தவர்களில்லை என்பதும் உண்மையாக இருக்கலாம். பெரும் பொருள் செலவு செய்து பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறோம். பலநாள் தங்கிக் கால பூஜைகள் ஒன்றுகூடத் தவறாமல் கண்டு தொழுகிறோம். பாடு கிடக்கிறோம். நோன்பிருக்கிறோம். அத்துடன் நமது கடமை முடிந்ததென்று திரும்பி விடுகிறோம்.

ஆனால் சிலர் இருக்கிறார்கள். கோயில்களுக்கெல்லாம் செல்வார்கள், பக்தியுடன் மூர்த்திகளைப் பணிவார்கள். விபூதி தீர்த்தம், துளவம் முதலிய பெற்றுக் கொண்டதும் அர்ச்சகருடன் அளவளாவுவார்கள், ஒதுவார்கள் முதலிய வயதானவர்களைக் கண்டால் கேள்வி மழை மொழிவார்கள். மூர்த்தியைக் காண்டார்கள். கண்ணைக் கவர்வனவற்றின்பால் கருத்தையும் பதித்துக் கூர்ந்து நோக்குவார்கள். ஏதாவது ஐயம் ஏற்பட்டாலோ அன்றி மேலும் தெளிவு தேவைப்பட்டாலோ, கண்ணை மூடிக்கொண்டு பார்ப்பார்கள். பின்னர் ராபர்ட் சீவெல், கில்ஹார்ன், பர்னல்யூலர், ஹீரா. ஹல்ட்ஸ், ஜோவா