பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

அசம்பாவிதம் என்று எண்ணியதாவது உண்டா? அல்லது நம்மனையார் உள்ளத்தில் விகார எண்ணங்களை அவை உண்டாக்கியதாவதுண்டா? தாயின் மடியில் கிடந்து பாலருந்தும் நிர்மிலமான குழந்தைகளைப் போன்றுதானே நாம் எல்லாம் கலையமுதை. அழகமதைப் பருகி அமைதி பெற முயன்று கொண்டிருக்கிறோம். இல்லையா? அப்படித்தான் உள்ளத்தில், விகாரமோ, வெறுப்போ, பகைமையோ சிறிதுமின்றிக் கிண்டல் செய்வது ஒரு அருமையான வேண்டத்தக்க பணி கலையும் கூட. அந்தக் கலையும் கைவரப் பெற்றவர் சகோதரர் பாஸ்கரன் அவர்கள்.

“குலவித்தை கல்லாமற் பாகம் படும் என்ற முதுமொழிக்கு பாஸ்கரன் அவர்கள் ஒரு சான்று. பாட்டனார் ஒரு நல்ல கவிஞர், தந்தையாரோ சிறந்த ஓவியப் புலவர். இலக்கிய உணர்வும், ஓவிய உணர்வும் இவர்க்குப் பரம்பரையாய்க் கிட்டிய செல்வம். நேர்மைக்கும் செம்மைக்கும் பெயர் பெற்ற வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார் அவர்களுடன் இவருக்கு மிக நெருங்கிய தொடர்புண்டு. அவர்களுடன் பலகாலம் நெருங்கிப் பழகிய நற்பேறு இவருக்கு எதையும் ஆராய்வதற்குரிய நெறிமுறைக்கு ஆக்கம் தத்தது என்று சொல்லலாம். அதற்கெல்லாம் மேலாக ரசிகமணி டி.கே.சி அவர்களுடன் இருந்த உறவும், ஈடுபாடும்தான் இவருக்கு எல்லா வல்லமையும் கொடுத்தவை என்று கூற வேண்டும். விஷயத்தை அணுகுவது, ஆய்வது தேர்வது, துய்ப்பது, எடுத்து விளக்குவது போன்றவற்றில் ஒரு தனி ஆற்றல் ஏற்படச் செய்தது அந்த உறவே என்று சொல்வோமானால் தவறில்லை.

இப்படியாகப் பெற்ற நலன்களை எல்லாம் பேணிக் காத்து, வளர்த்துச் சீரிய முறையில் உலகிற்களிக்க உதவிய மற்றொன்றையும் தாம் மறத்தற்கில்லை. அதுதான் இளைைமயிலிருந்தே பல்வேறு இடங்களில் பணியாற்றிய காலங்களில் கிடைத்த ஓய்வையும், ஏற்படுத்திக் கொண்ட ஓய்வையும் தல யாத்திரைக்கும், இலக்கிய வரலாற்றுச் சிற்பப் பணிக்குமே பயன்படுத்திக் கொண்ட அந்த ஆர்வம் இருக்கிறதே அதைத்தான் நாம் பாராட்ட வேண்டும். எல்வளவு பாராட்டினாலும் தகும்.

வேங்கடம் முதல் குமரி வரை என்று பொதுத் தலைப்பு அமைத்துக் கொண்டதே ஓர் அருமை. பண்டைத் தமிழன் மரபுப்படி பெயர் அமைந்திருக்கிறது என்று உவகை ஏற்படும் அதே காலத்தில், வாசகர்களை எல்லாம் தென்றலின் இன்பத்தை அனுபவிக்கச்