பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 267

செய்வதைப் போல, தெற்கு நோக்கி அழைத்துச் செல்லும் அருமை எண்ணியெண்ணி மகிழக் கூடியதாக இருக்கிறது.

வேங்கடம் முதல் குமரி வரை தொகுதியில் நான்காம் பகுதி இது, இதில் 30 கட்டுரைகள் உள்ளன. இலக்கியப் பூங்கா ஒருபுறம். சிற்பக் கலைக்கூடம் மறுபுறம் ஆராய்ச்சிப் பட்டறை இன்னொருபுறம், பக்திப் பஜனைக் கூடம் வேறொருபுறம், வரலாற்றுக் கதைக்கூடம் பிறிதொருபுறம் என்று இப்படியாகப் பல்வேறு துறைகளையும் இந்தக் கட்டுரை உலகிலே காணலாம்.

அன்புடன், ஆர்வத்துடன், உள்ளே செல்லுவோம். விருப்பு வெறுப்பின்றி அணுகுவோம். அருமை பெருமைகளை நன்றாக அனுபவிப்போம். நம்மை எல்லாம் இட்டுச் செல்லும் சகோதரர் பாஸ்கரன் அவர்கள் நம்முடன் இருந்து தக்கபடி உதவுவார். இனியும் முன்வாயிலில் காத்துக் கொண்டிருப்பானேன். வாருங்கள், உள்ளே நுழைவோம். “வாழ்க பாஸ்கரன், வளர்க அவர் பணி என்று வாழ்த்திக் கொண்டே.

கம்பன் அடிப்பொடி சா. கணேசன்,