பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கண்டறியாதன கண்டேன்

–)-–

சரோஜினி சுப்பிரமணியம்

ஆண்டவனைக் காண, அவன் அருளை காணும் பேறு பெற்றுவிட்டால் கண்டு அறியாதனவற்றையும் கண்டுவிடலாம் என்பது எங்கள் தந்தை தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானுடைய எண்ணம். அந்த எண்ணத்தை நிறைவேற்ற அவர்கள் கலை உலகில்

ஆற்றிய பணிகள் நாடறியும்.

சமீபத்தில் எங்கள் தந்தையின் 100 வது பிறந்தநாளன்று அவர்கள் மாவட்ட கலெக்டராகப் பணிபுரிந்த வடஆற்காடு மாவட்டத்திற்கு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர்கள் நினைவுடனும் அவர்கள் எழுதியிருந்த ‘பாலாற்றின் மருங்கிலே புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களைப் போய் பார்த்து வந்தோம். எங்கள் தந்தை மாவட்ட கலெக்டராகப் பணியாற்றிய போதும் அங்குள்ள கோயில்களுக்குப் போய் வணங்கி வந்திருக்கிறோம். திரும்பவும் எங்கள் மகன் திரு. ச. ராமசுந்தரம் ஐ.ஏ.எஸ் தாத்தா பார்த்த ஊரிலேயே மாவட்ட கலெக்டராகப் பணியாற்றிய போதும் அங்குள்ள கோயில்களுக்குப் போய்த் தரிசித்து வந்தோம். மூன்றாவது மறையாக எங்கள் தந்தையின் 101வது பிறந்தநாளன்று அவர்கள் எழுதியிருந்த வேங்கடம் முதல் குமரி வரை புத்தகத்தை எடுத்துக் கொண்டு போய் கோயில்களைத் தரிசித்து வந்தோம்.

வட ஆற்காடு மாவட்டத்தில் திருவலம் என்ற ஊருக்கு முதலில போனோம். தந்தையின் புத்தகத்திலேயே போக வேண்டிய வழித்தடங்கள், பார்த்துத் தரிசிக்க வேண்டிய மூர்த்திகள் பற்றி எழுதியிருந்தார்கள். திருவலத்தில் உள்ள பிள்ளையாருக்கு வரசித்தி விநாயகர் என்ற பெயர், எங்கள் தந்தையின் புத்தகத்தைப் படித்துக் கொண்டே கோயிலை வலம் வந்தோம். அங்கு கோயில்