பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 275

கொண்டிருக்கும் வல்ல நாதரையும் வல்லாம்பிகையையும் தரிசித்து வந்தோம். எங்கள் தந்தையின் கால்பட்ட இடம் என்று மனத்திற்குள் அஞ்சலி செலுத்திவிட்டு பொன்னை என்ற ஊரில் கட்டப்பட்டிக்கும் நவக்கிரக கூேடித்ரங்களையும் வணங்கினோம். வேலூர் கோட்டைக்குள் உள்ள ஜலகண்டேசுவரரையும் பாலாற்றின் கரையிலே பள்ளி கொண்டிருக்கும் பள்ளி கொண்ட பெருமாளையும் வணங்கினோம்.

பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி அதை பூர்த்தி பண்ணவும் விரைந்து இப்பூமிக்கு இறங்கி வந்து பெருக்கெடுத்து வரும் ஆற்றுக்கு குறுக்கே சங்கு சக்ரதாரியாய் ஆதிசேஷனுக்குத் தெற்கே தலையையும் வடக்கே காலுமாகப் பள்ளிகொண்டு விடுகிறார். பாலாறு பெருகி வருவதை சரஸ்வதியை மேலே போகவிடாமல் தடுத்துவிடுகிறார். கல்வி அறிவால் ஏற்படும் அகங்காரத்திற்கு அணைபோட்டு அறிவை வளரச் செய்யும் பெருமாளாக இப்பள்ளி கொண்ட பெருமாள் உத்தர ரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கிறார்.

கண்ணால் காண்பதையும் அறிவால் அறிவதையும் விட இறை அருளாலே தேர்ந்து தெளியும் நிலை ஒன்று உண்டு. அந்நிலையில் தான் கண்டு அறியாதவற்றையும் கண்டு விடுகிறார்கள். கடவுளைக் காண்பது எளிதல்லதான். ஆனால் அவன் அருளாலே அவன் அருளே கண்ணாகக் காணும் பேறு பெற்றுவிட்டால் கண்டு அறியாதவற்றையும் கண்டுவிடலாம். கண்டறியாதன கண்டேன் என்று அற்புதமாகப் பாடிவிடலாம். அப்படிப் பாடியவர் அப்பர் பெருமான்.

அப்பர் பெருமான் கயிலாயத்தை நேரில் தரிசிக்க விரும்பினார். அப்பர் பெருமானாக திருநாவுக்கரசு சுவாமிகள், காளத்திநாதனை வழிபட்ட பிறகு, கயிலையைக் கண்டு தரிசிக்க வேண்டுமென்ற விருப்பத்தால் காலால் நடந்தே புறப்பட்டார். வயதான காரணத்தினால் சோர்வுற்றுக் கையைத் தரையில் ஊன்றி தவழ்ந்து உருண்டு மார்பாலேயே ஊர்ந்து சென்றார். எப்படியும் கயிலையைச் சென்று அடைய உறுதி பூண்டார். அப்பர் பெருமானின் உறுதியை அறிந்த இறைவன், ஒரு முனிவர் உருக்கொண்டு சுவாமிகளைத் தடுத்து நிறத்த முயன்றார். அவர் நின்ற இடத்திலேயே ஒரு திருக்குளத்தை தோற்றுவித்து அதில் மூழ்கி எழுந்திருக்கச் செய்தார். அப்படி மூழ்கியவர்தான் திருவையாற்றுக்கு வந்தார். அங்கே கயிலையைக் கண்டார். இப்படியே யாதும் சுவடு படாமல ஐயாறு அடைகின்றார் அப்பர் பெருமான். அங்கு காணப்படும் பொய்கை சூர்ய