பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

புஷ்கரணியில் தீர்த்தத்தில் மூழ்கி, எழுந்து கயிலைக் காட்சியைக் கண்டு மாதர் பிறைக் கண்ணியான் என்ற பதிகம் பாடினார். காணுகின்ற பொருள்களிலும், எல்லா உயிர்களிலும் சிவத்தையும் சக்தியையும் காண்கிறார்.

காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

பேடை மயிலோடும் கூடி பிணைந்து வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

வரிக்குயில் பேடையோடு ஆடி வைகி வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

பாலாற்றின் மருங்கிலும், பொன்னியின் மடியிலும், காவிரிக் கரையிலும் பொருநைத் துறையிலும் வேங்கடத்துக்கு அப்பாலும் நூற்றுக்கணக்கான கோயில்களைக் கண்டு தரிசித்து வணங்கி அங்கு கோயில் கொண்டிருக்கும் மூர்த்திகளின் அழகையும் சிற்ப நயங்களையும் தான் கண்டுமகிழ்ந்ததோடு அல்லாமல், ஆனந்தவிகடன், கல்கி தீபாவளிமலர்களில் கட்டுரை வெளியிட்டார்கள்.

கல்கி ஆசிரியரின் வேண்டுகோளுக்கு இணங்கி உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கட்டுரையாக எழுதி வந்தார்கள். தமிழ் கூறும் நல்லுலக மக்கள் அதைப் படித்துப் பாராட்டினார்கள்.

எங்கள் தந்தையின் கோவில் சிற்பக்கலை ஆர்வம் அவர்கள் ரத்தத்திலேயே ஊறியது. திருநெல்வேலியில் பிறந்து இந்து கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று, உத்தியோகம் மேற்கொண்டு அரசுப் பணியையும் கலைப் பணியையும் தன்னுடைய வாழ்நாளில் சிறந்த சேவையாக மேற்கொண்டார்.