பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 277

எங்கள் தந்தை, தொ.மு.பாஸ்கரத் தொண்டமானின் குடும்ப அமைப்பும் இந்தப் பணிக்கு வழிகாட்டியாக அமைந்தது. எங்கள் தகப்பனாரின் தந்தை தொண்டமான் முத்தையா சிறந்த ஓவியக் கலைஞர். தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதை பாடும் அளவுக்குப் புலமை பெற்றவர். தந்தையையும் அந்தப் பணியிலேயே ஈடுபடச் செய்ய விரும்பினார்கள். பல ஓவியப் பயிற்சியும் பெற்று School of Arts Principal ஆக்க நினைத்திருக்கிறார்கள்.

ஆனால் எங்கள் தந்தையின் பாட்டனார் வி.பி. சிதம்பரம் தொண்டைமான் தன் பேரனை அரசுப் பணியில் சேர்க்க விரும்பினார்கள். எங்கள் வீட்டிற்கு அருகிலிருந்த கலெக்டர் சாய்புவின் உதவியால் அரசு பணியில் ரெவினியூ இலாக்காவில் பணியாற்ற சேர்ந்தார்கள். படிப்படியாக உத்தியோக உயர்வு பெற்று எல்லா மாவட்டங்களிலும் பணியாற்றினார்கள்.

தான் பணியாற்றிய மாவட்டங்களிலுள்ள கோயில்களுக்குச் சென்று சிற்பக்கலையின் அழகை ஆராதித்து ஆனந்தவிகடன், கல்கி தீபவாளிமலர்களில் கட்டுரைகளாக எழுதி வந்தார்கள். முதல் முதல் கிருஷ்ணாபுரம் கோயிலில் உள்ள சிற்பக் கலை அற்புதத்தை ஆனந்தவிகடன் மலரில் எழுதி வெளிஉலகிற்கு தெரியச் செய்தார்கள். -

தஞ்சை மாவட்டத்தில் 5 வருடங்கள் மாவட்ட உதவிக் கலெக்டராகப் பணியாற்றிய பொழுது அங்குள்ள கோயில்களில் உள்ள சிற்பக் கலைகளின் பிரதாபத்தைப் பற்றிப் பத்திரிகைக்கு எழுதி வந்தார்கள்.

அவர்கள் செய்த பணி எல்லோரும் போற்றும்படியாக இருந்தது. அதிலும் அவர்கள் தஞ்சையில் கலைக்கூடம் அமைக்க மாவட்ட கலெக்டர் திரு. டி.கே. பழனியப்பன் ஐ.ஏ.எஸ். தலைமையில் அவர்கள் ஆற்றிய தொண்டு காலமெல்லாம் போற்றப்பட வேண்டியது. அவர்களுடைய பேரப்பிள்ளைகள் 7 பேர் தாத்தா பேர் சொல்ல வாழ்ந்து வருகிறார்கள். இரண்டு பேரப் பிள்ளைகள், தாத்தாவின் பெயரைத் தாங்கி நிற்கிறார்கள்.

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு எங்கள் திருநெல்வேலி வீட்டிலேயே தங்கினார்கள், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை தன்னுடைய முழுமுதற் கடவுளாக வழிபட்டார்கள்.