பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

அவர்களின் உற்ற நண்பர் கம்பன் அடிப்பொடி திரு. சா. கணேசன் அவர்கள் உதவியோடு பிள்ளையார்பட்டியில் 7 நாள் தங்கி மெளன விரதம் மேற்கொண்டார்கள். அங்கே இருந்த பொழுதுதான் தமிழ்நாட்டுக் கோயில்களைப் பற்றி ஆராய்ந்து எழுதி மலர் வெளியிட வகுத்தார்கள். ஆனந்தவிகடன், கல்கி தீபாவளி மலர்களில் எழுதியதுடன் முதன்முதலில் மங்கள நூலகம் சார்பில் பிள்ளையார்பட்டி பிள்ளையார், மதுரை மீனாட்சி முதலிய நூல்களை எழுதி வெளியிட்டார்கள். அதன்பின் எங்கள் குடும்ப நண்பர் எஸ்.ஆர்.எஸ். மூலம் வேங்கடம் முதல் குமரி வரை நூல்களை 4 பிரிவுகளாக வெளியிட வாய்ப்பு அளித்தார்கள். ஓய்வு பெற் பின் கல்கியில் படித்துத் தொடர்க் கட்டுரையாக எழுதி வந்தார்கள். தமிழ்நாட்டுக் கோயில்களைப் பற்றி கல்கியில் படித்த அன்பர்கள் அப்பாவுக்கு வாழ்த்து எழுதினார்கள்.

தன் உற்ற நண்பர் கோவை கிரிதாரி பிரசாத்துடனும் தொழிலதிபர் திரு. கே. ஆர். ராதா அவர்களுடனும் சேர்ந்து வேங்கடத்துக்கு அப்பாலும் சென்று அங்குள்ள கோயில்களைப் பற்றி எழுதினார்கள். காசி, ஹரித்துவார், ரிஷிகேஷ் வரை சென்று வந்தார்கள். பம்பாய், பூனா, டில்லி தமிழ்ச் சங்கங்களில் உரையாற்றினார்கள்.

அவர்களுக்கு இலக்கிய உலகில் வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார் அவர்களும், ரசிகமணி டி.கே.சி சிதம்பரநாத முதலியார் அவர்களும் முக்கிய நண்பர்களாக இருந்தார்கள்.

சா. கணேசன், மு. அருணாசலக் கவுண்டர், ஜஸ்டிஸ் மகாராஜன், மீ.ப. சோமு என்ற உற்ற நண்பர்கள். ஏ.சி. பால்நாடார், ஹிலால் பிராஸ் முதலாளி முதலியவர்கள் உடன் பிறவாச் சகோதரர்கள் ஆக விளங்கி வந்தார்கள். ஆனால் உடன்பிறந்த சகோதரன் தொ.மு.சி. ரகுநாதன், தனது தமையனிடம் கடைசி வரை சுமுகமாக இல்லை. அந்த மன வருத்தம் எங்கள் தந்தை மருத்துவமனையில் கோமாவில் இருக்கும் பொழுது வெளிப்பட்டது.

தஞ்சையில் அவர்கள் ஆற்றிய கலைப்பணிக்கு இன்று எந்த ஆதாரமும் இல்லை. தஞ்சையில், கலெக்டர் பழனியப்பன் தலைமையில் எங்கள் தந்தை ஆற்றிய பணிகளை நாடே அறியும். ஆனால் அந்தச் சிலைகள் பேசுமா?