பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

என் அண்ணாச்சி என் பெற்றோருக்கு முத்த மகன், நான் ஒன்பதாவது மகள் என்று கூறினேன். -

எனக்குத் தெரிந்தவர்கள் தொ.மு.பா எழுதிய வேங்கடம் முதல் குமரி வரை என்ற புத்தகங்களைப் படித்தவர்கள். உங்கள் அண்ணா எழுதிய புத்தகத்தைப் படிக்கும்போது அந்தந்தக் கோவில்களை நேரில் பார்த்த மாதிரியே இருக்கும். உடனே அந்தக் கோவில்களுக்குச் சென்று பார்த்து வர உள்ளம் துடிக்கும் என்று கூறுவார்கள். சென்று பார்த்து வந்தவர்கள் புத்தகம் மிக உதவியாக இருந்தது என்று பாராட்டுவார்கள். அதைக் கேட்டு நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.

நானும் என் குழந்தைகளும் காலையில் எழுந்ததும் அண்ணா படத்தின் முன் நின்று அவர்களை நினைத்துக் கொண்டே வேலையில் ஈடுபடுவோம். என்னுடைய பேரன், பேத்திகள், கலெக்டர் தாத்தா படம் தானே என்றும், எங்கள் காலத்திலும் அவர்கள் பெயரைச் சொல்லியே நாங்களும் முன்னேறுவோம் என்று கூறி படத்தை வணங்கிச் செல்வார்கள்.

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், எங்கள் அண்ணாச்சி எங்கள் குடும்பத்தவர்களை வாழ வைத்த மகான் மட்டுமல்ல இன்னும் எங்கள் குடும்பத்தவர்களை வாழ வைக்கப்போகும் எங்கள் குலதெய்வம் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். இப்பிறவியில் அவர்கள் தங்கையாகப் பிறப்பு எடுத்தற்கு நான் போன பிறவியில் என்ன தவம் செய்தேனோ?

கலாரசிகர் தொண்டைமான்