பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

வழி இல்லாமல் பாட்டெழுதி மனு கொடுத்துக் கொண்டிருந்தான் பாரதி. 1919 இல் தாகூருக்கும் பாரதிக்கும்.ஏற்பட்ட நிலைமைகளைப் பாருங்கள்.

இன்று நாம் பாராட்டுகிற பாரதியின் எழுத்துகள், கனவுகள் எல்லாம் 1919க்குள்ளேயே அவன் எழுதி முடித்து விட்டான். ஆனாலும் தாகூரைப் பாராட்டுவதற்குத் தயாராக இருந்த தமிழன், பாரதியை இனம் கண்டு கொள்வதற்குக் கூட, தெரிந்து கொள்வதற்குக் கூட அன்றைக்குத் தயாராக இல்லை.

பாரதி மறைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின், இதைப் பாரதி யுகம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். சென்ற நூற்றாண்டின் முதல் இருபதாண்டுகள்தான் பாரதி உயிரோடிருந்தான். புதிய நூற்றாண்டில் நாம் காலடி எடுத்து வைத்திருக்கிறோம். ஆனால், இந்த நூற்றாண்டிலும் பாரதியுகம் தொடர்கிறது. எனென்றால், பாரதி கண்ட கனவு இன்னும் நனவாகவில்லை.”

“எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபத் திறப்பு விழாவில் ஜீவா பேசினார் பொன்னிலன் சொன்னார். அந்த மேடையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாரதியின் ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்ற பாட்ட பாடினாங்க. ஜீவா பேசும்போது, “பாரதி என்ன பாடினான்” என்று கேட்டார். ‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே இதுதான் அவன் பாடியது. அவன் ஆனந்த சுதந்திரம்னு சொன்னானே தவிர ஆகஸ்டு சுதந்திரம்னு பாடலை என்றார் ஜீவா.

ஆடுவோமே என்றால், “யாரு ஆடனும்? சுதந்திரம் வந்திருச்சின்னு பள்ளன் ஆடனும், பறையன் ஆடனும். மூச்சுமுட்ட கள்ளக் குடிச்சுட்டு எனக்கு சுதந்திரம் வந்திருச்சுன்னு அவன் ஆடனும். அப்படி ஆடினா... அதுதான் சுதந்திரம். எம்.எஸ்.சுப்பு லட்சுமி பாடுறதினால சுதந்திரம் வந்திடவில்லை” என்றார் ஜீவா.

1947 ஆகஸ்டு 15 இல் சுதந்திரம் வந்தது. 1947 அக்டோபரில் எட்டயபுரத்தில் அந்த விழா நடந்தது. அப்ப ராஜகோபாலாச்சாரி வங்காள கவர்னரா இருந்தார். அவரையெல்லாம் மேடையில் வைத்துக்கொண்டு இவ்வாறு ஜீவா பேசினார்.

‘விடுதலை விடுதலை என்ற இன்னொரு பாடல். ‘விடுதலை விடுதலை விடுதலை என்று மூன்று விடுதலை போட்டானே பாரதி. அந்த விடுதலை என்ன? அரசியல் விடுதலை, பொருளாதார விடுதலை, சமூக விடுதலை. மகாகவி பாரதி, திலகர் வழியில்