பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 295

வந்தவன். திலகர், அரவிந்தர் போன்ற தலைவர்கள் எல்லாம் இந்த நாடு வெள்ளைக்காரர்களிடமிருந்து விடுபட வேண்டுமென்று சொன்னார்களே தவிர, இந்திய நாடு சுதந்திரம் அடைந்தால் அதில் எந்தவிதமான பொருளாதார அமைப்பு இருக்க வேண்டும். எந்தவிதச் சமூக அமைப்பு இருக்க வேண்டும் என்ற கனவு திலகருக்கும் கிடையாது, அரவிந்தருக்கும் கிடையாது.

‘திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும்’ என்பது அந்தப் பாட்டின் ஒரு வரி.

திறமையிருந்தா, கள்ளநோட்டுக் கூட அடிக்கலாம், கள்ளச் சாராயம் காய்ச்சலாம். அதனாலதான் தீமையற்ற தொழில் புரிய வேண்டும் என்கிறான் பாரதி. அடுத்த வரியில் தேர்ந்த கல்வி என்றும், ஞானம் என்றும் பாரதி குறிப்பிடுகிறான். கல்வி வேறு, ஞானம் வேறு.

பாரதி முதலில் சமூக விடுதலையைச் சொல்கிறான், அதன்பின் பொருளாதார விடுதலை பற்றிப் பேசுகிறான். கடைசியில் பெண் விடுதலை பற்றிச் சொல்கிறான்.

‘ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே’ என்கிறான்.

“சரி” என்றாலும், ‘நிகர்’ என்றாலும் சமானம் என்றாலும் அர்த்தம் ஒன்றுதான். ஆனால் பாரதி அப்படி அழுத்திச் சொல்கிறான். அரசியல் விடுதலை, சமூக விடுதலை, பொருளாதார விடுதலை எல்லாம் சேர்ந்து வர வேண்டும் என்றே ஒரே பாடலில் மூன்று முறை விடுதலை என்றான்.

பாரதிக்குப் பின் அப்படிப்பட்ட பார்வை நமக்கு இருந்ததா? ஒரு விஷயத்தில் நான் பெருமைப்படுகிறேன். ஈரோடு, பெரியார் பிறந்த பூமி. சமூக நீதிக்காக, சாதி ஒழிப்புக்காக, பெண் விடுதலைக்காகப் போராடிய ஒரு தலைவர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த பூமி இது. இது ஒரு புண்ணிய பூமி.

பாரதியே சொல்கிறான். கோவில், குளங்கள், காசி, ராமேஸ்வரம் போன்ற சேத்திரங்களே, நாட்டுக்காக உழைத்த தேசபக்தர்களின் பிறந்த, வாழ்ந்த இடங்களும் என்று.