பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 எண்ணுங்கால்...

——

பிறவி ரகசியத்தையும் மனித வாழ்க்கையையும் பற்றிய தத்துவ விசாரம், சிந்தனையாளர்களையும் இலக்கிய கர்த்தாக்களையும் பன்னெடுங்காலமாக அலைக்கழித்து வருவதாகும். மதவாதத் தத்துவாசிரியர்கள் பலரும் பிறவிப் பெருங்கடல் நீந்தும் மனிதப் பிறவியின் ரகசியத்தை, தொட்ட இடத்திலேயே வந்து முடியும் சக்கர வட்டத் தத்துவமாக, மனித வாழ்க்கையை மாற்ற மாற்ற, வளர்ச்சியற்ற ஒன்றாகக் கண்டார்கள். வாழ்க்கை என்பது தொட்ட இடத்தில் வந்து முடியும் சக்கர வட்ட மல்ல என்பதைக் கருத்துலகில் மாத்திரம் நின்று கண்ட சிவவாக்கியர் போன்ற சில சித்தர்கள் இந்தச் சக்கர வட்டத் தத்துவத்தை விஞ்ஞானப்பூர்வமாகத் தேர்ந்து தெளிந்து அதன் அடிப்படையில் உலகாயத வாதம் வளர்ந்தோங்கியுள்ள காலம் இது. மதவாதிகளின் கருத்தில் தொடங்கி, சிவவாக்கியர் முதலான சித்தர் வழியிலும் சென்று, பரிணாம வாதத்தின் பாதை வழியாக இயக்கவியல் தத்துவத்தை எட்டிப் பிடித்து, பிறவி ரகசியமும், மனித வாழ்க்கையும் அதன் வளர்ச்சியும், தொட்ட இடத்திலேயே வந்து முடியும் சக்கர வட்டமல்ல, மாறாகத் தொட்ட இடத்துக்குத் திரும்பவும் வாராமலே சுழலேணிபோல மேன்மேலும் வளர்ந்தோங்கிச் செல்வதாகும் என்ற கருத்தினைப் பிரதிபலிக்கிறது இக்கவிதை.

என்னையே யானோக்கி எண்ணுகிறேன், எண்ணுங்கால் - கன்னி மகளொருத்தி காதலினால் அன்னவளை முன்னி அரவணைத்து முலைத்தடத்தில் முகம்புதைத்து, கன்னிச் சிறையுடைத்துக் கருப்பாதைக் காரிருட்டில் என்னையே நானிழந்து ஏதுமிலா தாகிவிட

எண்ணுகின்றேன் யானோக்கி எண்ணுகின்றேன். எண்ணுங்கால்