பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

புவனத்து வாழ்வியலின் புதைபொருளின் தன்மையினைக் கவனித்துச் சிறிதேநாம் கருத்துரன்றிப் பார்க்குங்கால் கருவடைந்த ஊருக்கே மறுபடியும் வருவதுதான் உருவடைந்த உயிர்வாழ்வின், உலகியலின் ரகசியமோ? மறுபடியும் வந்தவொரு மார்க்கத்தை நாடுவதால் உறுபயனும் ஏதுகொலோ? உலகியலில் வளர்ச்சியெனப் பெறுவதெலாம் வாயுமிழும் பேச்சோடு சரிதானோ? கிறுகிறுக்கும் ராட்டினம்தான் கீழ்மேலாய் வந்தாலும், கடலலைகள் படைதிரண்டு கரைநோக்கிப் பாய்ந்தாலும் திடலேறித் தாவாமல் திரும்பவுமே கடலுக்குள் தாழ்ந்திறங்கித் தன்னுள் தானாகும் சாட்சியம்போல், வாழ்விதுவும் வளர்ச்சியின்றி வட்டமிட்டுச் சுற்றிவரும் செக்கடியின் தடம்தானோ? திரிகையெனக் கிறுகிறுக்கும் சக்கரமோ? ஸ்தம்பிதத்தின் சாயைதரும் மாயையைத்தான் மண்ணுலகின் மானிடத்தின் வாழ்வென்றே நம்மனத்தில் எண்ணினமோ? என்றேநான் எண்ணுகின்றேன் எண்ணுங்கால்

வித்தொன்று முளைகீறி விகசித்து வெளியேறி, எத்திக்கும் கிளைவீசி இலையாகித் தழையாகி மொட்டாகிப் பூவாகி முற்றிக் கணியாகி விட்டாலும் அக்கனியும் விதையாக மாறுவதேன்? முட்டைச் சிறைக்குள்ளே மோனத் தவம்புரிந்த நிட்டை தனைக்கலைத்து நெட்டுயிர்த்து வெளியேறி வந்தவொரு சிறுகுஞ்சும் வளர்ந்துபெரி தானபின்னர் முந்தைப் பழம்வீடாய், முட்டைக் கருச்சிறையாய் மீட்டுமுர மாறுமொரு வேட்கையினால் ஒருதுணையைக் கூட்டிக் களிப்பதற்காய்க் கொக்கரித்துத் திரிகுவதேன்? ஐயிரண்டு மாதங்கள் ஆகியபின் கருவூரின் பையகன்று கீழிறங்கிப் பாருலகில் வந்தவொரு பாலகனும் வயதேறிப் பாலுணர்ச்சி மிக்கோங்கும் வாலிபனாய், மானிடனாய் மாறியபின், மீட்டுமொரு குறுமணலாய், சினைக்கருவாய், குழந்தையென மாறுதற்காய் மறுபடியும் பிறப்பிடத்தே மாலாகி வாடுவதேன்? ஒன்றுமற் றொன்றாகி, உருமாறி வேறாகிச் சென்றிடுமென் றெண்ணுவதும் சிரிப்புக் கிடமான