பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யோனே நோகுச்சி பிரபல ஜப்பானியக் கவிஞர். இவர் தம் தாய்மொழியாகிய ஜப்பானிய மொழியில் மட்டுமில்லாமல், ஆங்கிலத்திலும் பாடல்கள் இயற்றியிருக்கிறார். 18 வயதில், அமெரிக்கர் சென்று 13 ஆண்டுகள் அங்கு தங்கினார். இந்தியாவுக்கும், ஏன் சென்னைக்குமே கூட இவர் வந்து சென்றார். இந்தியாவைப் பற்றி ஜப்பானிய மொழியிலேயே ஒரு நூலும் எழுதியிருக்கிறார். இவருடைய கவிதை, பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மகாத்மா காந்தியடிகளை நேரில் சந்தித்த இந்தக் கவிஞர், நமது தேசபிதாவுக்குச் சூட்டிய பாமாலையே இது.

காணவும் தெரிகிலாத

களிப்புறு விஜய ரூபம் மானுயர்ந்தோங்க, அன்பின் வெற்றிசேர் மாட்சி ஓங்க தானையும் சேனையுமின்றித்

தமியனாய்ப் பொருது நின்றான் வானவர் போக பூமி

வாயிலை அருகி வென்றான்.

சிங்கவெங் குருளை யென்ன

அன்னவன் செருவில், கையில் சங்கெடுத்துதும் நாத

சாகரம் முன்னிப் பாய்ந்து பொங்குறும் எதிரொலித்துப்

பொருதிடும் பொருத ஆங்கே கங்குலின் நரக வாயில்

கதவங்கள் பொடிந்து வீழும்.