பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 305

பலமிலா யாக்கை, ரத்தப்

புசையிலா உடலம் எனினும் உலைவுறா மலையின் நெஞ்சம்

உருக்கெனக் கொண்டோன் என்றும் நிலைபெறும் உள்ள வன்மை

நெறியதால் உலகை யெல்லாம் குலைவுறச் செய்யும் ஆற்றல்

கொண்டவன் காந்தி எம்மான்.

மண்ணதில் புதைந்து வீழ்ந்த மன்பதை உரிமை தானும் தண்ணருள் அழிந்த அன்பின்

தகைமையும் அடிமை வாழ்வின் எண்ணருங் கொடுமை தன்னை

எதிர்த்திட புரட்சி கீதம் விண்ணுற முழக்கும் வீரம்

விளைத்தவன் காந்தி எம்மான்.

சாத்திரம் காணா உண்மைத்

தன்மையைத் தேடி, துன்பத் தோத்திரம் பாடி வையத்

துயர், பசி துடைத்து மக்கள் நேத்திரம் குளிர்வதென்றே

நெறியெனத் தெளிந்தான், கர்ம யாத்திரை சென்றான் காந்தி

ஈடென யாரைச் சொல்வாம்.