பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 பாரதி சமுதாயப் பாடல்

பாரத சமுதாயம் வாழ்கவே! என்று தொடங்கும் பாரதியின் பாடலே, அவன் எழுதிய கடைசிப் பாடல் என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது. இதனை வலியுறுத்துவதுபோல் பாரதியின் நெருங்கிய தோழரும். தொழிற்சங்கத் தந்தையுமாகத் திகழ்ந்த வி. சக்கரைச் செட்டியார் 1.3.1922 அன்று தாம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையொன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “பாரதியின் கடைசித் தோற்றம் கடற்கரையில் நடந்த ஓர் ஒத்துழையாமைக் கூட்டத்திலாகும். அவரைத் தமது பாடல்களிலொன்றைப் பாடும்படி ஜனங்கள் கேட்டபோது அவர் ‘பாரத சமுதாயம் என்ற பாடலைப் பாடினார். அப்பாடல் துணிவான கருத்தும், உயர்ந்த மன எழுச்சியும் பொருந்தியதாகும்.”

இக்கூற்றின் மூலம் நாமும் பாரதியின் கடைசிப் பாடலாக இதனைக் கொள்வதில் தவறில்லை. இதுவே இறுதிப் பாடலாயின் வளர்ந்தோங்கிச் சிறந்த பாரதியின் அறிவின் முதிர்ச்சி நிலையில் அவதரித்த பாடல் இது என்றும் நாம் கொள்ளலாம். மேலும் இப்பாடலுக்கு ஒரு தனிச்சிறப்பும் உண்டு. இந்தப் பாடலில்தான் பாரதி முதன்முறையாகத் தமிழுக்கே புதியதான பொதுவுடைமை என்ற சொற்சேர்க்கையைப் பிரயோகித்துள்ளான். மேலும், இந்தப் பாடலில்தான் அவன் பாரத மக்களைப் பாரத சமுதாயமாகக் காண்கிறான். எனவே இந்தப் பாடல் நமது ஆழ்ந்த சிந்தனைக் குரியது. இதனை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோமோ, அதனைப் பொறுத்து இதன் சிறப்பையும் நாம் உணர்ந்துகொள்ள முடியும். இந்தக் கருத்தோடு நாம் பாடலில் புகுவோம். எடுத்த எடுப்பில் பாரதி பாரத சமுதாயத்தை வாழ்த்துகிறான். வாழ்கவே என்று தான் கொடுக்கும் குரலை எதிரொலிக்கும் கோஷமாக வாழ்க! வாழ்க என்ற வார்த்தைகளும் பிறக்கின்றன. இவற்றிலிருந்து,