பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 3 || ||

ஐயா உங்களுக்கு எடைக்கல்லும் தராசும்தான் புரிகிற பாஷையா? விலையும் மதிப்பும்தான் விளங்கக்கூடிய மொழியா?

உங்களுக்கு அரசனில்லாத ஆட்சியைப் பற்றி கற்பனையே செய்ய முடியாதா? அப்படியென்றால் நான் வகுக்கின்ற புதிய சமுதாயத்தை, நீங்களும் புரிந்துகொள்ளுங்கள் என்று சொல்வது போல் பின்வருமாறு பாடுகிறான்.

எல்லாரும் ஒர் குலம் எல்லாரும் ஒர் இனம் எல்லாரும் இந்திய மக்கள். எல்லாரும் ஒர் நிறை எல்லாரும் ஓர் விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்! எல்லாரும் எல்லாரும் என்று அழுத்தியழுத்திப் பாடித் தனது பாடலை அருமையாக முடிக்கிறான். பாரதி கண்ட பாரத சமுதாயக் கனவு திட்டவட்டமான சிந்தனை வளர்ச்சியோடும், தெளிவோடும், தர்க்க ரீதியாக வளர்ச்சி பெற்றுச் சிகரம் போல் பொலிவு பெறுவதை இந்தப் பாட்டில் நாம் காண்கிறோம்.

அற்புதமான பாட்டு இது. இந்த விளக்கத்தோடு பாரதியின் இந்தப் பாடலை அணுகிப் படியுங்கள். நான் கூறாத, எனக்குப் புலப்படாத பல உண்மைகள் உங்களுக்குப் புலப்படலாம்.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய இந்தியக் கலைக் களஞ்சியம் நூல் வெளியீட்டு விழாவில் முதல் பிரதியை பெயரன் பாலபாஸ்கர் பெறுகிறார்