பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்


தொண்டைமானவர்கள் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல நல்ல பேச்சாளரும் கூட. இலக்கிய மேடைகளிலும், வானொலியிலும் அவருடைய குரல் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

தஞ்சைக் கலைக் கூடமும், அவருடைய நூல்களும் கலைமகளுக்கும் தமிழ் மகளுக்கும் அவர் விட்டுச் சென்ற சீதனமாகும். இன்னும் பதிப்பிக்கப் பெறாத அவரது கட்டுரைத் தொகுப்புக்கள் ஏறத்தாழ ஏழுக்கும் அதிகமாகவே இருக்கும். இந்த அறக்கட்டளையின் மூலம் அவற்றையும் பதிப்பிக்க முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். தஞ்சைக் கலைக் கூடத்தில் அதை உருவாக்கிய தொண்டைமானவர்களுடைய உருவப்படமோ, பெயரோ இடம் பெறாதது அவருடைய நண்பர்களுக்கும், குடும்பத்தாருக்கும் பெருங்குறையாகவே இருந்து வருகிறது. அந்தக் குறையும் நிவர்த்திக்கப்பட வேண்டும். அதற்காக மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை பயன் தரவில்லை.

இலக்கியப் பணியையும், கலைத் தொண்டையும் தம் இரு கண்களாக மதித்து, அறுபதாண்டு காலம் வாழ்ந்த பயனுள்ள வாழ்க்கை, 1965 ஆம் ஆண்டு, மாாச் 31 ஆம் நாள் நிறைவு பெற்றது.


முதுபெரும் புலவர் வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார்