பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

என் கீழ் வேலை செய்த டிப்டி கலெக்டர் ஒருவர் வேலை செய்வதில் திறமை மிக்கவர். அவர் வேலையில் குறையே காண முடியாது. இவரிடம் இருந்த குறை எல்லாம், இவர் அரசியல்வாதிகளின் தயவை நாடி அவர்களுக்கு வால் பிடிப்பதுதான். இவர் சப்ளையும் அதிகம் வாங்குகிறார் என்று புகார். அவரைப் பற்றி ஒரு மொட்டை மனு சர்க்காருக்குப் போய், அது என்னிடம் விசாரணைக்கு வந்தது. நான் அந்த டிப்டி கலெக்ரை அழைத்து இப்படி உம்பேரில் புகார் ஒன்று வந்திருக்கிறது கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளும் என்று எச்சரித்தேன். மூன்று வருஷ காலமாக டிப்டி கலெக்டர் வேலை பார்த்தவர் அவர். அந்த மூன்று வருஷ காலத்திலும் முகாம்களில் எல்லாம் என்ன என்ன சப்ளை வாங்கினார், அந்த சப்ளைகளுக்கு எல்லாம் அவர் வாங்கிய பில்கள், அந்த பில்களுக்குப் பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்டதாக கிராம முனிசீப் சர்டிபிக்கெட்டுடன் வாங்கிய சீட்டுகள் அத்தனையையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஒட்டி ஒழுங்காக வைத்திருந்தார். இப்படி அதி அக்கறையோடு அவர் செய்திருப்பதிலிருந்தே அவர் பேரில் இருந்த சந்தேகம் வலுப்பெற்றது. அவருக்கு எழுதினேன், “சமீபகாலத்தில பெரிய அதிகாரிகள் முகாம்களில் தங்கள் சப்ளைகளைத் தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டும். தன் கீழ் வேலை செய்பவர்களிடம் சப்ளை எதிர்பார்க்கக்கூடாது’ என்று சர்க்கார் உத்திரவிட்டிருப்பது உமக்குத் தெரியாதா? இனி சப்ளை பெறுவதையும் அதற்காக பில்கள் வாங்கி அவற்றை அதிக கவனத்துடன் ஒட்டி வைப்பதையும் நிறுத்திவிடும் என்று எழுதினேன். அவ்வளவுதான், அந்த டிப்டி கலெக்டர் இடிந்தே போய்விட்டார். சப்ளை பெறுவதையும் நிறத்திவிட்டார் என்றே கேள்வி.

இத்தகைய அனுபவங்கள் எல்லாம் பெற்ற நான் எனக்கு வேண்டியவைகளை என் காம்ப் கிளார்க்கு மூலமே பெற்றுக் கொண்டேன். ஒவ்வொரு தடவையும் ரூபாய் நூறுக்கு அவர் பெயருக்கு செக் கொடுத்து அதற்குக் கணக்கு வைத்துக் கொள்ளச் சொல்வேன். அத்தொகை செலவானதும் மேலும் ஒரு நூறு ரூபாய்க்கு செக் கொடுக்கும் வழக்கம் வைத்திருந்தேன். பில் வாங்குவது என்ற பழக்கமே வைத்துக் கொள்ளாதவனாக வாழ்ந்து ஓய்வு பெற்றுவிட்டேன்.

ரிவின்யூ டிபார்ட்மெண்டில் எது எடுத்தாலும் தாமதம். எல்லாம் சிவப்பு நாடா செய்கிற காரியம் என்றெல்லாம் புகார் சொல்பவர்கள் இருக்கிறார்கள். உண்மைதான் விஷயங்களை மனிதத் தன்மையோடு