பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

வலிவுடைய பெருமக்கள் வாகாய் நடந்தார்கள்

நலிவுற்ற பொழுதகத்தும்

நடந்தார்கள் மற்றவரும்

நீண்ட நெடுவழியாய்ப் போயிற்று

நிற்காமல் நடந்தாலும்

மூண்ட பெருவழியின்

முடிவோ தெரியவிலை.

குன்றேறிக் கடந்தாரும்

குமைந்தார்கள் அலுப்புற்று இன்றே நாம் சென்றடைவோம்

என்றவரும் மனம் உடைந்தார்

நம்பிக்கை இழந்தவர்கள்

நலிந்தார்கள், மெலிந்தார்கள் வம்புக்காய் இவன் பின்னே

வந்தலுத்தோம் என்றார்கள்

வழிகாட்டும் வள்ளலையே

வைதிடவும் துணிந்தார்கள் பழித்தார்கள் பல சொல்லி

பண்பறியா ஒரு சிலரும்

அன்னவரில் ஒரு கயவன்

ஆங்காரம் கொண்டெழுந்து முன் சென்ற தலைவனவன்

வழி மறித்து முன் நின்றான்