பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கலைக் களஞ்சியம் 63

அவர்கள் சொல்லும் பாடல்களைக் கேட்பதிலே, எத்தனை

எத்தனையோ ரஸமான பாடல்கள், நையாண்டிப் பாடல்கள், எல்லாம் வந்து மாணவர்களை ஒரு குலுக்கு குலுக்கும். தமிழ்க் கவிகளில் ஈடுபடுத்தும். தமிழின் பேரில் ஒரு ஆர்வமே பிறக்கும்படி செய்துவிடும். அவர்களிடம் மாணவராக இருந்து அவர்கள் தந்த தமிழார்வத்தை அனுபவித்தது காரணமாகத் தமிழ்நாட்டில் தக்க புகழ்பெற்று விளங்கும் பெரியார் பலர் உண்டு. சென்னைப் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் திரு ஆர்.பி. சேதுப்பிள்ளைய வர்களே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

மே.சொ. சுப்பிரமணியக் கவிராயர் அவர்கள், நல்ல கவிராயர் குடும்பத்திலே பிறந்தவர்கள். குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் திரிகூட இராஜப்பன் கவிராயர், திருவாவடுதுறை ஆதீனம், மகாசன்னிதானம் ரீ சுப்பிரமணிய தேசிகர் முதலானவர்கள் பரம்பரையை சேர்ந்தவர்கள் என்றால் பல சொல்வானேன். திருவாவடுதுறை மடத்தில் மகா வித்துவான் மீனாகதிகந்தரம் பிள்ளை அவர்களிடம், டாக்டர் சுவாமிநாத அய்யர் அவர்களோடு ஒரு சாலை மாணாக்கராக இருந்து பாடம் கேட்டவர்கள். இவர்களையே தனக்குப் பின் மடாதிபதியாக ஆக்க வேண்டும் என்று நினைத்து, தேசிகர் அவர்கள் இவர்களுக்கு சின்னப் பட்டம் கட்ட விரும்பியபொழுது மடத்தைவிட்டே இவர்கள் தப்பியோடி வந்துவிட்டது பலருக்கும் தெரிந்த ஒரு ரகசியம். மடாதிபதியாக இருந்திருந்தால் தமிழ் வளர்ச்சிக்கு எவ்வளவோ செய்திருக்கக்கூடும். மடத்தையும் விருத்தி செய்திருக்கலாம். ஆனால், மடத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் திருநெல்வேலி இந்து கலாசாலைக்கு லாபகரமாக முடிந்தது. மடத்தை விட்டு வெளியே வந்ததும் இந்து கலாசாலையில் தமிழ் ஆசிரியராக அமர்ந்தார்கள். ரீ சிவராம பிள்ளை அவர்களோடு ஒத்துழைத்தார்கள். மூன்றாவது பாரம் வகுப்பிலிருந்து இண்டர்மீடியேட் வகுப்பு வரை பாடம் எடுத்தார்கள். முப்பது முப்பத்தைந்து வருஷங்களாக வேலை பார்த்து எண்ணற்ற மாணவர்களின் அன்புக்குப் பாத்திரம் ஆனார்கள்.

பாடம் நடத்துவதைவிட பாட்டுக் கட்டுவதில் அவர்கள் மிகு சமர்த்தர். பாடல்கள் எல்லாம் நல்ல அர்த்த புஷ்டியுள்ள சிலேடை நயமுடையதாய் கேட்பவர்களுக்கு இன்பம் அளிப்பதாய் இருக்கும். யாருக்காவது உபசாரப் பத்திரம் தயார் செய்ய வேண்டுமானால் மாணவர்கள் கவிராயர் அவர்களிடம்தான் ஓடுவார்கள். கவிராயர் அவர்களும் உடனே பாட்டுக்கட்டிக் கொடுக்கத் தயங்கமாட்டார்கள்.