பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

‘நாமங் களவாணி என்று ஒருவரைத் தூற்றுவது போலச் சொல்லிப் பின்னால் நா மங்களவாணி என்று வாழ்த்துவார்கள்.

“பாட்டில் (Bottle) ஏய் பொருள் கொண்டு

ரஸாயன சாத்திரம் பயிற்றும் நின்பால் யாங்கள் பாட்டிலே பொருள் கொண்டு பயிற்றுதும்” என்றுதான் “கெமிஸ்டிரி லெக்சரர்” ரீ டி.வி. நீலகண்டம் பிள்ளையவர்கள் பள்ளிக்கூடத்தைவிட்டு விலகியபோது பாடிக் கொடுத்தார்கள். கல்லூரிக் காரியதரிசியாயிருந்த சர் எஸ். குமாரசாமி ரெட்டியார் அவர்கள் மந்திரி பதவி ஏற்றபோது “இருவேறு உலகத்து இயற்கை, திரு வேறு. தெள்ளியராதலும் வேறு” என்ற குறள் இவரிடம் பொய்த்துவிட்டது. கல்வியும் திருவும் ஒருங்கே இவரிடம் இருந்த காரணத்தினால்தானோ இவருக்கு இரட்டியார் என்று பெயர் வாய்த்தது என்றெல்லாம் பாடினார்கள்.

பள்ளி ஆசிரியர்களுக்கும் காரியதரிசிகளுக்கும்தான் பாட்டெழுத வார்கள் என்றில்லை. தன்னிடம் படித்த பள்ளி மாணவர்களையும் பாட்டெழுதி வாழ்த்துவார்கள்.

திருவளர் மருமச் செங்கண்மால் பணியும்

சிவபிரான் திருவடி பணிந்தே மருவளர் மாலை சூட்டு பாற்கரனாம் மாணவ! பாற் கரம் பிடித்தே பெருவளமுடன் நீ நல்லறம் பேணும்

பெற்றியை யான் மிக மகிழ்ந்தேன் சருவ நன்னலமும் எம்பிரான் உமக்குத் தருகென வாழ்த்துகின்றேனே.

என்ற பாட்டு யாருடைய கல்யாணத்தில் பாடியிருக்க வேண்டும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை அல்லவா?

இவர்களுடைய கல்வித் திறமையை, திருநெல்வேலி வாசிகளும் இந்து கலாசாலை மாணவர்களும் மாத்திரம் அனுபவித்தார்கள் என்றில்லை. சென்னைக்கு மாட்சிமை தங்கிய வேல்ஸ் இளவரசர் விஜயம் செய்தபோது தமிழ்நாட்டில் தலைசிறந்த வித்துவான்களாக நான்கு பேரைப் பொறுக்கி அவர்களுக்கு ‘கில்லத் என்ற மரியாதையை அரசாங்கத்தார் செய்தார்கள். அப்படிப் பொறுக்கி எடுத்த நான்கு பேர்களில் இவர்களும் ஒருவர், சென்னை சென்று, வேல்ஸ் இளவரசர் கையால் கொடுத்த தங்கத்தோடா பீதாம்பரங்கள் எல்லாம் பெற்று திருநெல்வேலிக்குத் திரும்பிவந்த