பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 65

போது மாணவர்களாகிய நாங்கள், எதிர் சென்று அழைத்து வந்து உபசாரப் பத்திரங்கள் எல்லாம் வாசித்துக் கொடுத்தோம். உபசாரப் பத்திரத்தில் “ஐயா! தங்களுக்குக் கிடைந்த இந்த கில்லத் தங்களுக்கு மட்டுமே கிடைத்ததாக நாங்கள் கருதவில்லை, தங்களை அண்டியிருக்கும் தமிழ் மாணவர்களாகிய எங்கள் எல்லோருக்குமே கிடைத்தாகத் தான் கருதுகிறோம்” என்று எழுதியிருந்தோம். உடனே அவர்கள் “ஆம்! வேல்ஸ் இளவரசர் இதை ஒரு கையில் கொடுக்க வில்லை பலகையில் தான் கொடுத்தார்” என்று குறிப்பிட்டார்கள். பின்னால் விசாரித்ததில் நல்ல அழகாய் வேலைப்பாடு செய்த பலகைத் தட்டில் வைத்துத்தான் கில்லத் பரிசு கொடுக்கப்பட்டது என்று அறிந்தோம். பலகையும், பல கையும் நல்ல சிலேடையாக அமைந்து கேட்டவர்களுக்கு பரம சந்தோஷத்தைக் கொடுத்தது. இப்படி எத்தனை எத்தனையோ சம்பவங்கள், சிலேடையும் யமகமுமாகவே அவர்கள் பாடல்களைக் கொட்டி எங்களை

மகிழ்வித்திருக்கிறார்கள்.

கவிராயர் அவர்களைப் பற்றி வெள்ளகால் ராவ்சாஹிப் வெ. ப. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் பல தடவை பாராட்டிப் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். முதலியாரவர்கள் தாம் பாடும் பாட்டுக்களையெல்லாம் முதல் பரிசீலனைக்கு அனுப்புவது இவர்களுக்கும் டாக்டர் சாமிநாத அய்யர் அவர்களுக்கும்தான். பாட்டின் ஓசை நயத்தை அறிவதில் கவிராயர் அவர்களை மிஞ்சியவர்கள் ஒருவருமே கிடையாது என்பார்கள். நல்ல சுவையை அறியும் காது படைத்தவர்கள் அவர்கள் என்பார்கள். அந்த உள்ளுணர்ச்சி அவர்களுக்கு கருவிலே அமைந்த திருவாகும். அந்த உணர்ச்சி காரணமாகத்தான் நல்ல சுவையுடைய பாட்டுக்களைத் தாம் அனுபவிப்பதுடன் மற்ற மாணவர்களையும் அனுபவிக்கும்படி செய்யும் திறன் அவர்களிடம் இருந்திருக்கிறது.

இத்தகைய எங்கள் கவிராயர் அவர்கள், கலாசாலையின் சேவையை விட்டு 1930 இல் பிரிந்து விட்டார்கள். 1931 இல் இறைவன் திருவடியையே சேர்ந்துவிட்டார்கள். கலாசாலையில் அவர்கள் செய்த சேவையை நினைவூட்ட அவர்களுடைய திருவுருவம் ஆங்கிலச் சொற்பொழிவு மண்டபத்தை அலங்கரிக்கிறது. படத்தில் கில்லத் உடையுடனேதான் அவர்கள் காட்சி அளிக்கிறார்கள்.

எங்கள் கவிராயர் அவர்களைப் பற்றி இன்னும் எவ்வளவோ சொல்லலாம். ஆனால் இடம் வேண்டுமே!