பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

---- தமிழறிஞர் முதலியார் —-—

C

“உங்களுக்கு அந்தப் பாட்டு ஞாபகத்தில் இருக்கிறதா?

“எந்தப் பாட்டு? “என்ன? சுந்தர காண்டத்தில் அனுமன் சீதையிடம் கணையாழியைக் கொடுத்ததும், அவள் அடைந்த நிலையை வருணிக்கும் பாட்டு.”

“ஓ! அதுவா!

வாங்கினள், முலைக்குவையில் வைத்தனள், சிரத்தால் தாங்கினள்; மலர்க்கண்மிசை ஒற்றினள், தடந்தோள் வீங்கினள், மெலிந்தனள், குளிர்ந்தனள், வெதுப்பொடு ஏங்கினள்; உயிர்த்தனள், இதென்னதெனலாமே. என்ற பாட்டுத்தானே!” “ஆமாம். அந்தப் பாட்டுத்தான்! அந்தப் பாட்டுத்தான்! சரியாக நான் நினைத்த பாட்டையே சொல்லிவிட்டீர்களே! சபாஷ்” (அளவிறந்த உத்சாகம் உள்ளத்தில் தோன்றியதை முகம் காட்டிற்று.) “ஆம். அது நல்ல பாட்டுத்தான். கம்பன் பாட்டில் எதுதான் நல்ல பாட்டில்லை?

“அப்படியா! அந்தப் பாட்டின் விசேடம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்கள் பார்ப்போம்.”

(இது ஏதடா வம்பாக முடிந்தது)

“எனக்கு அப்படி விசேடமாக ஒன்றும் தெரியவில்லை. தாங்களே கொஞ்சம் சொல்லுங்கள். நான் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்.”