பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பொதிகை முனிவர் டி.கே.சி

–-–

அன்று பொதிகை மலையிலே அகத்திய முனிவர் வந்து தங்கியிருந்தார். அவரோ தென் சொற் கடந்தவர். வடசொற்களுக்கு எல்லை தோந்தவர். என்று முளதென் தமிழை இயம்பி இசைகொண்டவர். அவரது பர்ணசாலையிலிருந்த இருந்த இடத்திலே ஒரு சத்தியயுகமே நடந்தது. ஆம், அங்கு வரும் யானையும், அதன் மேல் பகைமை பூண்ட சிங்கமும் கூடிக்குலாவி விளையாடிக் கொண்டிருந்தன. மானும் ஒரு துறையிலே தண்ணீர் குடித்தது. கரடியும் எருமையும் சேர்ந்து உறவாடிக் களித்தது. இன்னும் பாம்பும் மயிலும் சேர்ந்து ஒன்றாய் விருந்தருந்தியது. ஒன்றுக்கொன்று வைரவரிகளாகப் பிற இடங்களிலே வாழ்ந்த ஜந்துக்கள் எல்லாம் அகத்தியர் முன்னிலையிலே இப்படி கூடிக் குலாவி மகிழ்ந்தது. இப்படியெல்லாம் நான் சொல்லவில்லை குமரகுருபரர் சுவாமிகளே சொல்கிறார். மதுரை மீனாட்சி அம்மைக் குறத்திலே, பொதிகை மலைக் குறத்தி தன் நாட்டு வளம் கூறும் முறையிலே தான் இப்படி சத்திய யுகம் ஒன்று நடந்தது அன்று, என்று பாடுகிறாள்.

சிங்கமும் வெங்களிறுமுடன் விளையாடும் ஒருபால் இனப்புலியும் மடப்பிணையும்

திளைத்திடும் அங்கொருபால் வெங்கரடி மரையினோடும்

விளையாடும் ஒருபால் விடஅரவும் மடமயிலும்

விருந்தயரும் ஒருபால் அங்கணமர் நிலங்கவிக்கும் வெண்காகை நிழற்கீழ்