பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 79

இருந்த தமிழகத்தை, அதில் வாழ்ந்த தமிழர்களை எல்லாம் நல்ல கவிதைகளை அனுபவிக்கவும், அக்கவிதைகளைக் கேட்டு அதில் லயித்து ஆனந்தம் அடையவும் செய்தவர் டிகேசி. அவர் விளக்குகிறது போல தமிழ்ப் பாட்டையோ, ஆங்கிலக் கவிதையையோ வேறு யாரும் விளக்கி நான் கேட்டதில்லை. அவர் பாட்டிற்கு புது உரையோ பொழிப்புரையோ கருத்துரையோ கூறமாட்டார். பாட்டைப்பாடுவதற்கு முன் ஒரு விரிவான முன்னுரை சொல்வார். பாட்டின் பொருளையும் கூறுவார். அதன்பின் அவருக்கே உரிய பாணியில் பாட்டைப் பாடுவார். அடிஅடியாக நிறுத்தி நிறுத்திப் பாடுவார். மடக்கி மடக்கிப் பாடுவார். அவர் பாட்டைப் பாடி முடித்துப் பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த அன்பர் எல்லோருக்குமே பாட்டு மனப்பாடம் ஆகிவிடும். அவருடைய சொற்பொழிவுகளில் ஆவேசம் இருக்காது. அடுக்குச் சொல் ஆரவாரம் இருக்காது. ஆனால் அமைதி இருக்கும், அனுதாபம், அழகு இருக்கும். ஆழமாக கேட்போர் உள்ளத்தில் பதியவும் செய்யும். கம்பனைப் பற்றித் தமிழ்க் கவிதையைப் பற்றி பேசும்போது அவருடைய நா பேசாது. வாய் பேசும். அவருடைய அடர்ந்த நெற்றிப் புருவம் பேசும், செழித்து வளர்ந்துள்ள மீசை பேசும். எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய இதயமே நம்முடைய இதயத்தோடு பேசும் என்று சொன்னால், அவர் பேச்சைக் கேட்ட ஒருவரும் மறுக்க முடியாது.

டிகேசியின் தமிழ்ப் பற்று, கம்பன் பற்று, இவைகளை தமிழ் அன்பர் சிலர் தான் அனுபவித்திருப்பார்கள். ஆனால் அவர் வீட்டு விருந்தோம்பலை அனுபவித்திருப்பவர்கள் எண்ணிறந்தவர்கள். விருந்தோம்பலில் சிறந்த இலக்கியமாக வாழ்ந்தவர் அவர். குற்றாலத்தில் அவரது வீடு அடையாத வாயில் அகமாகவே விளங்கியது. அவர் வரும் விருந்தினர்களுக்கு விருந்தளித்து கம்பனை உணர்த்துகிறார் என்றால் அது எல்லாம் அவ்வளவு எளிதாகச் சொல்லக்கூடிய நிலைதான். உணவையும் கவிதையையும் சேர்த்தே ஊட்டிவிடுவார். அவருடைய விருந்தோம்பலை பல தடவை அனுபவித்த கவிமணி தேவியவர்கள்,

அன்னைபோல் என்னை

அருவியில் நீராட்டி இன்னமுதும் பக்கத்து

இருந்துாட்டி என்னோடு தங்கு தங்கு என்று சொன்ன தங்கக் குணத்தானை எங்கு நான் காண்பேன்.இனி