பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

கம்பன், அவன் பாடிய கவிகளுக்குக் கொடுத்த உருவம் எப்படி இருக்க வேண்டும் என்று படித்து அதன்படியே திருத்தியமைத்தார். அப்படியே கம்பர் தரும் ராமாயணம் என்று ஒரு புதிய பதிப்பையே வெளியிட்டார். கம்பராமாயணம் என்றாலே பயந்து ஓடிய அன்பர் பலரும் கம்பன் பாடல் மீது மோகம் கொண்டு கம்பன் காவியத்தைப் படிக்க ஆரம்பித்தனர், கம்பராமாயணப் பிரசங்கம் ஊருக்கு ஊர் நடக்க ஆரம்பித்தன. கம்பனுக்குத் திருநாள், கவிஞனுக்கு பல்லாண்டு அவன் பிறந்த தேரழுந்துரிலும், அவர் அமரரான நாட்டரசன் கோட்டையிலும், இன்னும் சென்னையிலும் கோவையிலும் கோலகலமாகக் கொண்டாடப்பட்டன. அத்தகைய ஒரு அரிய பணியைச் செய்தவர் ஆவர்.

இன்னும் ஒன்று. அன்று தமிழ்நாட்டு இசை, தமிழில் பாடுவது அனுசிதம். சுந்தரத் தெலுங்கினில் பாடுவதே சீரும் சிறப்பும் உடையது என்று கருதப்பட்டது. உள்ளம் உருகிப் பாவம் கலந்த இசையை எல்லாம் மறந்து, வெறும் நாத சுகத்திலேயே பாகவதர்கள் எல்லாம் மெய்மறந்தனர். பாடுகிற பாட்டுகளில் பாடுகிறவர்களுக்கும் பொருள் தெரியாது, கேட்கிறவர்களுக்கோ பொருள் தெரியவே தெரியாது. இதைக் கேட்ட ஒரு சிலர் நெஞ்சம் குமுறினார்கள். இதயத்தைத் தொடுவது, பாவம் கலந்த இசையே. தமிழர்களும் அந்தப் பயனை அடையவேண்டும் என்று பத்திரிகைகளில் எழுதினார்கள் மேடைகளில் பேசினார்கள். இப்படிப் பேசியவர்களில் முதன்மையனவர்தான் டிகேசி. அவருடைய பேச்சைக் கேட்டபின் தான் செட்டிநாட்டு அரசர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் தமிழிசை இயக்கத்தையே ஆரம்பித்தார். அந்த இயக்கம் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் கேட்கும்படி செய்திருக்கிறது. தமிழிசைக்குத் தலையாய தொண்டு புரிந்தவர் டிகேசி. பண்ணும் பரதமும் அவைகளில் பங்குபெறச் செய்தவரும் அவரே. தமிழ்நாட்டின் கலை வளர்ச்சிக்கு அவர் தந்த ஆதரவே இன்று பல காரியங்கள் வளர்வதற்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக அவர் செய்த சேவை, அன்பர் பலரைத் தமிழ்க் கவிதையை அனுபவிக்கும்படியும் அப்படி அனுபவித்து ஓர் ஆனந்த பரவச நிலையையே அடையும்படி செய்ததுதான். மேலைநாட்டில் ஒரு பெரிய கூட்டத்தைக் கலைக்க போலீசார் வேண்டியதில்லையாம், கண்ணிர்ப் புகை வேண்டிய தில்லையாம். சரி, நான் இப்போது ஒரு கவிதை சொல்லப் போகிறேன் என்று சொன்னால் கூட்டம் கலைந்து விடுமாம். அதேநிலையில்