பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 77

போது, அவரைப் பொதிகை முனிவர் என்றோ அப்பொதிகை முனிவர்

சந்நிதியில் ஒரு சத்தியயுகம் நடந்தது என்றோ கூறினால் அதை மறுக்க முடியுமா என்ன?

ரஸிகமணி டிகேசி உலகை நீத்து, ஒன்பது வருஷங்கள் ஆகிவிட்டன. அவரது நினைவு விழாவை அவரது ஜனனதினமாகிய கோகுலாஷ்டமி அன்று (11-9-63) திருக்குற்றாலத்திலே கொண்டாடுகின்றனர். அப்படி அவர் நினைவைக் கொண்டாடும் அளவுக்கு அவர் செய்த சேவைதான் என்ன? ஐம்பது வருஷங்களுக்குமுன்னே ஆங்கிலம் கற்ற தமிழர், தமிழில் என்ன இருக்கிறது என்று கேட்டார்கள். கூட்டங்களில் தமிழில் பேசுவது கெளரவக் குறைவு என்று நினைத்தார்கள், ஆங்கிலத்தில் உள்ள அறிவியல் நூல்களைப் போல் தமிழில் இல்லை என்று சொன்னார்கள். இப்படியெல்லாம் அவர்கள் சொன்னதைத்தான் கவிஞர் பாரதி,

புத்தம் புதிய கலைகள் பஞ்ச

பூதச் செயல்களில் நுட்பங்கள்கூறும் மெத்த வளருது மேற்கே அம்

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை சொல்லவும் கூடுவதில்லை அவை

சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை மெல்லத் தமிழினிச் சாகும்

மேற்கு மொழிகள் புவிமிசை ஒங்கும்

என்று ஒரு பேதை உரைத்தான் என்று வெகு ஆவேசத்தோடு பாடி இருக்கிறார். அந்த நிலைமை மாறி ஆங்கிலம் கற்ற தமிழர்களை எல்லாம் தமிழிலே மோகங்கொள்ளச் செய்தவர் டிகேசி. அறிவியல் சரித்திரங்கள் மாத்திரம் அல்ல அழகுக் கலைகளைப் பற்றியெல்லாம் தமிழில் சொல்லுதல் கூடும் என்று நிரூபித்தவர் டிகேசி. எல்லாம் தமிழில் முடியும் என்று கட்டியங்கூறி இளைஞர் பலரைமுன் நடத்தியவர் டிகேசி. இந்தப் பணி ஒன்றுக்கே அவரை வாழ்த்தலாம், வணங்கலாம், போற்றலாம்.

டிகேசி மிக துணிச்சல் உடையவர். கிட்டத்தட்ட முப்பது வருஷங்களுக்கும் மேலாக இருந்து கம்பன் காவியமான ராமாயணத்தைப் படித்தார். அதில் கம்பன் பாடாத பாடல்கள் பல இட்ைச்செருகலாக இருக்கின்றன என்று கண்டார். மேலும் பல பாடல்கள் பிழைபட அச்சடிக்கப்பட்டிருக்கிறது என்றும் கண்டார். மிக துணிச்சலாக ஆம், எத்தனையோ பண்டிதர்களுடைய எதிர்ப்புகளுக்கிடையே, இடைச்செருகல்களை எல்லாம் நீக்கினார்,