பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- இலக்கிய நினைவுகள் - கவிமணி

– –

இருபது வருஷம் இருக்கும். அப்போது என் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள பள்ளியில் ஒரு கதம்ப நிகழ்ச்சி நடக்க இருந்தது. அந்த கதம்ப நிகழ்ச்சியில் ஒரு காட்சி. பாரதமாதாவின் திருவோலக்கம். இந்திய நாட்டின் படம் பகைப்புலனாக அமைய, சூலம் ஏந்திய கையளாய் பாரதமாதா உயர்ந்த பீடத்தில் நிற்கவும், அவளைச் சுற்றி அவள் தன் பிள்ளைகள் பஞ்சாபி, மராத்தி, வங்காளி, தமிழ்க்கன்னி முதலியவர்கள் நின்று பாடவும், ஆடவும் ஏற்பாடு. பாடுவதற்கு என்று பள்ளித் தலைமை ஆசிரியை தேடி எடுத்த பாட்டு,

பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு r

என்று தொடங்கும் பாரதியார் பாட்டுத்தான். பாட்டிலே வருகின்ற சரணங்கள் எல்லாம், பாரத நாட்டின் பெருமையைப் பொதுவாகக் கூறுகின்றதாகத்தான் அமைந்திருந்தது. ஆசிரியைக்கு ஒரு ஆசை. இந்த சரணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரதேசத்தின் பெருமையைக் குறிப்பதாக இருக்கலாமே. அதை அந்த அந்த பிரதேசத்துப் பெண் பாடலாமே, பின்னர் எல்லோரும் ஒன்றாய்ச் சேர்ந்து பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு என்று பாடலாமே, அப்படிப் பாடலும் ஆடலுமாக ஒரு காட்சி நடத்தினால், அந்தப் பாரதமாதாவின் திருவோலக்கம், அத்தாணி, இருப்பு நன்றாக இருக்குமே என்று என்னைக் கண்டு தன் விருப்பத்தைச் சொன்னாள் ஆசிரியை, சரி, பாரதி பாட்டில் உள்ள சரணங்களை மட்டும் வேண்டுமானால் மாற்றி எழுதிவிட்டால் போகிறது என்று சொல்லிவிட்டேன். அப்படியே, நான்கைந்து சரணங்களை எழுதிக் கொடுத்தேன். வித் அபாலிஜிஸ் டு பாரதி என்று மிக்க பணிவான வணக்கத்தோடு பாட்டை எழுதினேன். பாட்டு இதுதான்.