பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

பாருக்குள்ள நல்ல நாடு - எங்கள் பாரத நாடு வீரத்திலே சிந்து தீரத்திலே - போரில் விறிட்டு எழுந்திடும் நாட்டினர் யாம் பாரதத்திலே புகழ் ஏறிச் சிறந்திடும் பாஞ்சால நாட்டினுக் கீடுமுண்டோ இப்படிப் பாடுவாள் பஞ்சாபி. மேலை நிலத்தினர் மெச்சிப் புகழ்ந்திடும் மேன்மை படைத்த துறைமுகமும் மாலை பரிதிக் குழம்பில் குளித்திடும் மாமலை மராட்டம் என் நாடாம். இது மராத்திய பெண்ணின் பாட்டு இனி வருகிறது வங்காளியின் எக்காளம் பொங்கு திரைகளும் நொங்கு நுரைகளும் பூக்கள் இனங்களும் தாங்கி வரும் கங்கை மகள் நடம் ஆடிவரும் எந்தன் வங்கத்துத் தாய்க்கொரு ஈடுமுண்டோ கடைசியாக வருகிறாள் தமிழ்மகள் கன்னித் தமிழ் இன்பப் பாய்ச்சலோடு வையை காவிரி எல்லாம் புரண்டு வரும் எண்ணத் திதிக்கும் தமிழ் நாடே புகழ் ஏறிச் சிறந்திடும் எந் நாடாம் பின்னர் எல்லோருமாகச் சேர்ந்து பாடி ஆடி மகிழ்கிறார்கள்

இந்து முசல்மான் கிறிஸ்தவரும் இன்னும் எண்ணற்ற சாதி இருந்தாலும் சொந்தச் சகோதரர் போலவே நாற்பது கோடி ஜனங்களும் கூடிடுவோம். பள்ளிப் பிள்ளைகளும் பாட்டைப் பாடி நாட்டியம் ஆடி, கதம்ப நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திவிட்டார்கள். இந்த நிகழ்ச்சி நிகழ்ந்த ஒரு மாதத்திற்குள் நண்பர் சிலருடன் திருவனந்தபுரம் செல்லப் புறப்பட்டேன். திருநெல்வேலியிலிருந்து காரிலேயே புறப்பட்ட நாங்கள் நாகர்கோயில் வழியாகச் சென்றோம். அது வரை நான் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள் பாடல்களைப் பத்திரிக்கையில் பார்த்துப் படித்த அனுபவித்திருந்தேனே ஒழிய கவிமணியவர்களை நேரில் காணும் வாய்ப்புப் பெறவில்லை.