பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 85

விஷயங்களை எல்லாம் தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய அவசியத்தையும் பற்றிக் குறிப்பிட்டார். ஆங்கிலக் கவிஞன் ஆர்னால்ட் பென்னட் எழுதிய ஆசிய ஜோதி, பாரசிக கவிஞன் ஒமர்க்கய்யாம் எழுதிய ரூபயாத், முதலியவைகளை எல்லாம் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்ததைப் பற்றி எல்லாம் பேசினோம். பிற நாட்டுக் கவிஞர் கருத்துக்களை தமிழ் மொழியில் பெயர்த்து எழுதும்போது, அப்படியே சொல்லுக்குச் சொல், வார்த்தைக்கு வார்த்தை மொழியெர்க்கக் கூடாது, அந்த அந்த மொழியில் உள்ள பாட்டை பலமுறை படித்து அனுபவிக்க வேண்டும். அனுபவித்து அனுபவித்து ஒரு ஆனந்த வெறியையே அடைய வேண்டும், அந்த வெறியில், மூல பாடத்தையே மறந்து விட்டு, தமிழ்ப் பண்பு, தமிழ் மரபுகளுக்கு எல்லாம் மாறுபடாவகையில் மொழிபெயர்ப்புப் பாடல் அமைய வேணும். அப்படிச் செய்யாமல் சொல்லுக்குச் சொல் தேடி, வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்து கவிதைக் கன்னி உருவானால் ‘பாப் பண்ணிய தலையும், சாயம் பூசிய உதடும், உடைய ஆங்கிலப் பெண்ணுக்கு கொரநாட்டுப் புடவையை கொசுவம் வைத்துக் கட்டி விட்ட கதையாகத்தான் இருக்கும்.

இதற்கு உதாரணமே பார்த்துவிடலாமே

Have with a loaf of bread beneath the Bough

A flask of wine, a book of Verse and thou

Beside me singing in Wilderness

And wilderness is Paradise now

என்பது உமர்கய்யாம் பாடிய பாட்டு. அதற்கு

பூங்கொடிகள் கவின் நிழற் கீழ் புகழ்க் கவிதை நூலொன்றும் தேங்கமழும் மதுச் சாடி சிறு ரொட்டியுடன் நீயும் கோங்கலரும் கடுவனத்தே குயிலிசையில் பாட்டிசைத்து பாங்கிலெனைக் கூடுவையேல் அது அன்றோ பரம பதம் என்பது, நண்பர் ஒருவர் எழுதிய நேரான மொழிபெயர்ப்பு.