பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

வெய்யிற் கேற்ற நிழல் உண்டு

வீசும் தென்றல் காற்று உண்டு கையில் கம்பன் கவி உண்டு

கலசம் நிறைய அமுதுண்டு தெய்வ கீதம் பல உண்டு

தெரிந்து பாட நீயும் உண்டு வையம் தனில் இவ்வனம் அன்றி

வாழும் சொர்க்கம் வேறு ளதோ என்பது கவிமணியின் பாட்டு. அப்போது எளிதாகத் தெரிந்து விடுமே. எது மூலம், எது மொழிபெயர்ப்பு. எது வைரம் எது போலிக்கல் என்று. ஆங்கிலப் பாடல் ஆனாலும் சரி, பாரசீகப் பாடல் ஆனாலும் சரி, அந்தப் பாடல்களில் உள்ள கருத்து இருக்கும் மொழிபெயர்ப்பில். ஆனால் அந்த நாட்டு மண்வாடையே இருக்காது. ஆம். பிற நாட்டு நல்லறிஞர் கருத்துக்களையெல்லாம் கவிமணியவர்கள் தமிழ்ப் படுத்தியிருக்கிறார்கள், தமிழையும் தமிழரையும் படுத்தாமலேயே.

1944 ஆம் வருஷம் திருநெல்வேலியில் ஒரு தமிழ் விழா கொண்டாடினோம். விழாவின் முதல் நாள் தலைவர் கவிமணியவர்கள். இரண்டாம் நாள் தலைவர் ரசிகமணி டிகேசி அவர்கள். இருவருக்கும் வரவேற்பு கூறும் பணி எனக்குக் கிடைத்தது. என்னால் சொல்லக் கூடியதை எல்லாம் சொல்லிப் பாராட்டிப் பேசினேன். வான் புகழ்க்கு எல்லை வாழ்த்துவோர் நாவெல்லை என்று கவிஞன் பாடியது போலவே இருந்தது என் நிலை. இதைக் கேட்ட பின், டிகேசி பேசினார்கள். “ஒரு கல்யாணத்திற்கு மாப்பிள்ளை போகிறது என்றால், மாப்பிள்ளையுடன் மாப்பிள்ளைத் தோழனும் போவான். மாப்பிள்ளை அப்பாவியாக இருந்தாலும், தோழன் பட்டவாளியாயிருப்பான். பெண் விட்டார் செய்யும் உபசரணைகளில் எல்லாம் குற்றம் குறை கூறிக்கொண்டே இருப்பான். ஆதலால் பெண் வீட்டார் மாப்பிள்ளையை விட மாப்பிள்ளைத் தோழனையே கரிசனமாகக் கவனித்துக் கொள்வார்கள். மாப்பிள்ளைக்கு சரிகை வேஷ்டி, சில்க் ஷர்ட், கல் வைத்த மோதிரம் என்றால், அத்தனையும் தோழனுக்கும் கொடுப்பார்கள். அவன் கலகம் செய்துவிடக் கூடாதே என்று. அதுபோல் இந்த விழா நடத்துபவர்கள் விழாவிற்கு மாப்பிள்ளையாக வந்திருக்கும் கவிமணியவர்களைப் பாராட்டு கிறார்கள். மாப்பிள்ளைத் தோழனாக என்னையுமே பாராட்டுகிறார்கள். நான் என்ன பட்டவாளிப் பயலா” என்று சொன்னார்கள்.