பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 91

அது என் சொந்தச் சரக்குத்தானா என்று. ஆதலால் அதைத் தொடர்ந்து ஒரு கட்டுரையை அனுப்பி அவர் பக்கத்தில் கிடந்த மேசை அருகிலேயே உட்கார்ந்து அப்போதே எழுதும்படி கேட்டார். எழுதிக் கொடுத்தேன். அதன்பின்தான் அங்கு ஒரு உதவி ஆசிரியனாக என்னை அமர்த்தினார் என்றார். இப்படி தான் ஆனந்தவிகடனில் வேலை பெற்று ஆசிரியர் கல்கியின் அடிச்சுவட்டில் நடந்து, கதைகளையும் கட்டுரைகளையும் எழுதி எழுதி நல்ல எழுத்தாளனாகவும் அவர் பயிற்சி பெற்றுள்ளது பற்றி எல்லாம் கதைகதையாகச் சொன்னார். அப்படி சொல்கிற போதெல்லாம், தன்னை ஒரு நல்ல கதாசிரியனாக ஆக்கிய பெருமை கல்கியையே சாரும் என்பதை மறவாமலேயே இருந்தார்.

அவர் எழுதியதில் அவருக்கே மிகவும் பிடித்தமானது. அதிசயத் தம்பதிகள் தான். அதற்குக் காரணம் அந்த அதிசயத் தம்பதிகள் வாழ்வோடு, அவருடைய வாழ்வும் பின்னிக் கிடந்ததுதான். கணவனும் மனைவியுமாக வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள் கடைசியில் சண்டை போட்டு, முடிவாக மனைவியைக் கொன்று விட்டுதான். மறு வேலை செய்வது என்று தீர்மானித்திருக்கிறான் என்று அந்த அதிசயத் தம்பதிகளைப் பற்றி எழுதிவிட்டு வீட்டிற்கு வருகிறார். மறுநாள் தன் மனைவி ராஜியோடிருந்து அவளுக்கு சீமந்தத்தை நடத்துகிறார். சீமந்தம் நடந்தபின் அன்று மாலை அவளோடு கேரம் ஆடுகிறார். ஆனால் அந்த அருமை மனைவி அன்றிரவே இவரை துக்கத்தில் ஆழ்த்திவிட்டு மறைந்துவிடுகிறார். மண்ணில் இனிய வாழ்வினுக்கு

வாய்த்த நல்ல துணை என்ன எண்ணியிருந்த மணவாளன்

ஏங்கி ஏங்கி உளம்வருந்த கண்ணிற் காணா விண்ணுலகம்

கடந்து சென்ற அந்த ராஜியை நினைத்து. பத்து வருஷ காலம் உருகியிருக்கிறார். இதை அவர் சொல்கிறபோதெல்லாம் அவர் கண்களில் நீர் நிறைந்து நிற்கும். -

அவருக்கு ஒரு குறை. ஒரு குழந்தை இல்லையே என்று. நாகப்பட்டினம் செளந்திராஜப் பெருமாள் கோயில் போயிருந்த போது அங்குள்ள சந்தான கோபாலனை மடி மீது கிடத்தி, மகப்பேறு வாய்ப்பதற்காக அந்தப் பெருமாளை வேண்டிக் கொண்ட காட்சி