பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 அமரர் ஏ.சி. பால்நாடார்

—-—

பூர்விக கிரேக்கருக்கு ஹோமர் எப்படியோ, ரோமருக்கு வர்ஜில் எப்படியோ, இத்தாலியருக்கு டாண்டே எப்படியோ, ஜெர்மானியருக்கு கத்தே எப்படியோ, ஆங்கிலேயருக்கு ஷேக்ஸ்பியரும் மில்டனும் எப்படியோ, வடமொழிக்கு வால்மீகி எப்படியோ அப்படியே தமிழுக்கும் கம்பர் பெருமை கொடுக்கிறார் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் கம்பனுக்குக் கட்டியங் கூறினார் ஒருவர். ஏதோ உபசாரமாகக் கூறியது அன்று. அப்படிக் கொண்ட சில ‘இலக்கியங்களை அந்த அந்த மொழியிலேயே கற்றவர். மற்றும் பல இலக்கியங்களை ஆங்கில மொழி மூலம் கற்றவர். இப்படி நுண்மான் நுழைபுலத்தோடு கற்று அறிந்த பின் தான் உலக மகா கவிகளின் வரிசையிலே ஒருங்கு வைத்து எண்ணத் தகுந்த தமிழ்க் கவிஞன் கம்பனே என்று கூறினார். அப்படிக் கட்டியங்கூறிக் கொண்டு, சென்ற முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கம்பன் புகழ் பரப்பும் தொண்டனாக வாழ்ந்திருந்தார் பால் நாடார். எழுபத்து நான்காம் வயது வரை வாழ்ந்து சமீபத்தில் இறைவன் திருவடி சேர்ந்திருக்கிறார். நிறைவாழ்வு வாழ்ந்து நிறைந்த புகழ்பெற்ற பின்னரே மறைந்திருக்கிறார்.

கம்பன், கம்பனது காவியம், கம்பன் உருவாக்கிய ராமனிடம் எல்லாம் எல்லையற்ற ஈடுபாடு உடைய இவரை கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்தவர் என்றால் பலர் நம்பவே மாட்டார்கள். ஆனால் இலக்கிய உணர்வுகளில் சமய வேறுபாடு எல்லாம் ஏது. திருநெல்வேலி ஜில்லாவில் ராதாபுரததை அடுத்த கூடங்குளத்திலே நல்ல சைவ மரபிலே பிறந்தவர். அவரது தாய் தந்தையார் அவருக்கு இட்டிருந்த பெயர் சங்கரமூர்த்தி. இளமையிலே தமிழ் இலக்கியங்களை எல்லாம் நன்கு கற்றுத் தேறியிருக்கின்றார். பின்னர் திருச்சி பிஷப்ஹப்பர் கல்லூரியில் படித்தக் காலத்தில் இவ்வாறு