பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

வாய்ப்புக் கிடைத்தது எனக்கு. சென்றபோதெல்லாம் அவரைக் கண்டேன். கடைசியாக அவரை நான் பார்த்தது 26.4.57 ஆம் தேதி. அன்று அவரது முகத்தில் ஒரு தெளிவு இருந்தது. படுக்கையிலேயே கிடந்தாலும் உடல் நலம் பெற்றிருப்பது போலத் தெரிந்தது. எவ்வளவோ பேசினோம். சில மாதங்களுக்கு முன் நான் அனுப்பிய விநாயக ஸ்தோத்திரங்கள் என்ற சமஸ்கிருத நூலைப் படித்துவிட்டதாகவும் அதிலுள்ள விஷயங்களை வைத்து ஒரு கதையை உருவாக்கிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். மிக்க சந்தோஷம் அடைந்தேன். தாம் பிழைத்துக் கொள்வோம் என்ற நம்பிக்கை வந்து விட்டது அவருக்கு. அது போதும் அவர் தேற என்று எண்ணினேன். நான் அவரிடம் விடைபெற்றுப் புறப்படும் போது, என்னிடம் இருந்த காஞ்சி காமகோடி சங்கராச்சாரியார் படத்தில் ஒரு பிரதி வேண்டும் என்றார் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி வந்தேன். உடனே அனுப்ப முடியவில்லை. இனி நான் அந்தப் படத்தை எப்படி எங்கு அனுப்புவது என்றுதான் ஏங்குகின்றேன். வேறு என்ன செய்ய!

கர்ணன் கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பம்